சென்னைனா கசக்குது... கொங்கு மண்டலம் மட்டும் இனிக்குதா..? எடப்பாடிக்கு எதிராக கொதிக்கும் நிர்வாகிகள்..!

Published : Feb 18, 2026, 06:10 PM IST

கொங்கு மண்டலத்தில் இருக்கிற 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 40 தொகுதிகளை இறங்கி வேலை பார்க்க வியூகம் அமைக்கும் எடப்பாடி பழனிசாமி, சென்னை மண்டலத்தில் அந்த மாதிரியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை

PREV
13
எடப்பாடியின் தேர்தல் வியூகத்தால் அப்செட்

தேர்தலுக்கு வேலை செய்யாத மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி கடுமையாக எச்சரித்திருக்கிற நிலையில் இரண்டாம் கட்ட அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகத்தால் அப்செட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாகவும், சென்னை மண்டலம் திமுகவின் கோட்டையாவும் இருக்கிறது. ஆனால், கொங்கு மண்டலத்தை குறிவைத்து பல அதிரடிகளை திமுக செந்தில் பாலாஜி களமிறங்க செய்து கொண்டிருக்க, சென்னை மண்டலத்தை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

23
பலமாகும் திமுக

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் மொத்தம் 37 தொகுதிகள் இருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மட்டும்தான் அதிமுக வெற்றி பெற்றது. மொத்தம் 36 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது.

கொங்கு மண்டலத்தில் இருக்கிற 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 40 தொகுதிகளை இறங்கி வேலை பார்க்க வியூகம் அமைக்கும் எடப்பாடி பழனிசாமி, சென்னை மண்டலத்தில் அந்த மாதிரியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தான் அதிமுக நிர்வாகிகளின் கோபத்துக்கு காரணமாக இருக்கிறது. சென்னை மண்டலம் அதிமுகவுக்கு சவாலாக இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் 2011ல் சென்னை மண்டலத்தில் அதிமுக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

33
ஒதுங்கும் எடப்பாடி பழனிசாமி

ஆனாலும், வேளச்சேரி, மயிலாப்பூர், தி.நகர், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் அதிமுக நல்லாவே வேலை செய்து தொகுதியை கைப்பற்ற வேகம் காட்ட வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி இங்கு கவனம் செலுத்தாதற்கு இந்த தொகுதிகள் எல்லாத்தையும் தமிழக பாஜக டெல்லி தலைமை மூலமாக வாங்குகிற முடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதற்கு எதிர்ப்பு எதுவும் சொல்லவில்லை என்பதும் அதிமுகவின் சென்னை மண்டல நிர்வாகிகளுக்கு கோபத்தை கூட்டி இருக்கிறது என்கிறார்கள்.

இதுவரை சென்னை மாவட்ட செயலாளர்களை பெயரளவுக்கு அழைத்து எடப்பாடி எச்சரித்து இருக்கிறார். ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறார் என கொதித்து போய் இருக்கிறார்கள் சென்னை மண்டல அதிமுக நிர்வாகிகள்.

Read more Photos on
click me!

Recommended Stories