வார இறுதி விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை
நவீன காலத்திற்கு ஏற்ப எலக்ட்ரானிக் யுகத்தில் இருந்து அடுத்த கட்டமான ஏ.ஐக்கு மாறி வரும் நிலையில், போட்டி போட்டு உழைக்கும் நிலை மட்டும் இன்னும் குறையவில்லை. எப்பதான் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் விடுமுறை கிடைக்காதோ அந்த நாளில் போக்குரவத்து சத்தம் இல்லாத இடத்திற்கு செல்லமாட்டமா.? இயற்கையை ரசிக்க வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கி தவிப்பவர்களுக்கு வாரத்தின் இறுதி நாட்களாக சனி மற்றும் ஞாயிறு கொண்டாட்டத்தை கொடுக்கும் அதிலும் கூடுதலாக ஒருநாள் சேர்ந்து விடுமுறை கிடைத்தால் உடனே குடும்பத்தோடோ அல்லது நண்பர்களோடோ சுற்றுலாவிற்கு பறந்து விடுவார்கள்.
25
நாளை முதல் சிறப்பு பேருந்து
அந்த வகையில் வருகிற சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையையொட்டி தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலில், நாளை (21/02/2025 வெள்ளிக்கிழமை) 22/02/2025 (சனிக்கிழமை) 23/02/2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
35
கிளாம்பாக்கம்- கோயம்பேடு- மாதவரம்
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 21/02/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 245 பேருந்துகளும், நாளை மறுநாள் 22/02/2025 (சனிக்கிழமை) 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 21/02/2025 வெள்ளிக் கிழமை அன்று 51 பேருந்துகளும் 22/02/2025 சனிக்கிழமை அன்று 51 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
45
முன் பதிவு செய்த பயணிகள்
மேலும் மாதாவரத்திலிருந்தும் நாளை 21/02/2025 அன்று 20 பேருந்துகளும் 22/02/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7708 பயணிகளும் சனிக்கிழமை 3132 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7612 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
55
கூட்டத்தை தவிர்க்க முன்பதிவு செய்யுங்கள்
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.