அடிதூள்! பொங்கலுக்கு 9 நாள் விடுமுறை.? பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான்!

Published : Sep 02, 2025, 09:08 AM IST

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5 வரை காலாண்டு தேர்வு விடுமுறை வருகிறது. ஜனவரி மாதம் வரும் பொங்கலுக்கு 6 முதல் 9 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

PREV
16
பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் விடுமுறை என்றாலே அளவில்லாத மகிழ்ச்சி கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவா வேண்டும். இந்நிலையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் போதிய அரசு விடுமுறை கிடைக்காததால் பள்ளி மாணவர்கள் கவலை அடைந்தனர்.

26
ஆகஸ்ட் மாதம் விடுமுறை

பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விடுமுறை கிடைத்ததால் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் செப்டம்பர் மாதம் 5ம் தேதி மிலாடி நபி வருவதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறையாகும். பின்னர் 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ம் தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது.

36
காலாண்டு தேர்வு விடுமுறை

இதனையடுத்து செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க உள்ளது. வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும் நிலையில் இம்முறை 9 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விடுமுறைகள் அடங்கும். 9 நாட்கள் விடுமுறைக்கு எங்கு செல்லாம் என்பது தொடர்பாக இப்போதே திட்டமிட்டு வருகின்றனர்.

46
பொங்கல் விடுமுறை

இந்நிலையில் காலாண்டு விடுமுறையே தொடங்காத நிலையில் ஜனவரி மாதம் வரும் பொங்கலுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது என மாணவர்கள் காலண்டரை புரட்ட ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும். ஆனால் இந்த முறை பொங்கலுக்கு 6 முதல் 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளதால் மாணவர்கள் இப்போதே குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

56
பொங்கலுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை

அதாவது ஜனவரி 14 புதன் கிழமை தை பொங்கல், ஜனவரி 15 வியாழன் கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 வெள்ளிக் கிழமை உழவர் திருநாள் வருகிறது. ஜனவரி 17 மற்றும் 18 வார விடுமுறை வந்துவிடுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 13ம் தேதி செவ்வாய் கிழமை போகி என்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. அப்படி விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

66
பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை

அதாவது ஜனவரி 14 புதன் கிழமை தை பொங்கல், ஜனவரி 15 வியாழன் கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 வெள்ளிக் கிழமை உழவர் திருநாள் வருகிறது. ஜனவரி 17 மற்றும் 18 வார விடுமுறை வந்துவிடுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 13ம் தேதி செவ்வாய் கிழமை போகி என்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. அப்படி விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories