TN Government Holiday: 4 நாட்கள் தொடர் விடுமுறை! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

First Published | Sep 12, 2024, 6:48 AM IST

Continous Government Holiday: மிலாது நபி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. சென்னை, கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

Tamilnadu Government

வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் தமிழக போக்குவரத்துத்துறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் சொந்த ஊர் செல்லவும் ஆன்மிக தலங்களுக்கு செல்லவும் சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வார விடுமுறை, மிலாது நபி உள்ளிட்ட 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Transport Department

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: வரும் 13ம் (வெள்ளிக் கிழமை), 14ம் (சனிக்கிழமை), 15ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை முகூர்த்தம்) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 13, 14 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் சுழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Education Loan: மிஸ் பண்ணிடாதீங்க! மாணவர்கள் கல்விக் கடன் பெற இன்று சிறப்பு முகாம்! என்னென்ன சான்றிதழ் தேவை?

Latest Videos


Special Operation

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, இருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13ம் தேதி (வெள்ளிக் கிழமை) மற்றும் 14ம் தேதி (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் 955 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Special Government bus

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 13ம் தேதி மற்றும் 14ம் தேதி அன்று 190 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 13ம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 14ம் தேதி அன்று 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Government Bus Special

மேலும் ஞாயிறு முதல் செவ்வாய் வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 21,849 பயணிகளும் சனிக்கிழமை அன்று 11,724 பயணிகளும் ஞாயிறு அன்று 14,271 பயணிகளும் திங்கட்கிழமை அன்று 11,710 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:  Tamilnad Mercantile Bank: தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் வேலை! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Weekend Special Buses

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 

click me!