Published : May 06, 2025, 09:20 AM ISTUpdated : May 06, 2025, 09:34 AM IST
காரைக்குடியில் அரசு பேருந்தும் பால் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தேனாற்று பாலம் அருகே திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துக்கொண்டிருந்தது. தேவகோட்டையில் இருந்து காரைக்குடியை நோக்கி வந்த தனியார் பால் வாகனம் சென்றுள்ளது.
24
லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பால் ஏற்றிவந்த லாரி சாலையில் கவிழ்ந்து எதிர் திசையில் வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பால் வேனை ஓட்டிய ரூபன், அரசு பேருந்து ஓட்டுநர் நாகராஜ், நடத்துனர் செல்வேந்திர பிரசாத் ஆகியோர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
34
3 பேர் பலி
மேலும் பேருந்தில் பயணித்த 16 பேர் படுகாயங்களுடன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்து பால் வேனில் இருந்த ஆறுமுகம், கருணா, தமிழ்பாண்டியன் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இந்த விபத்து சுமார்அதிகாலை 3 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலை நடந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.