தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாள் விடுமுறை.! வெளியான அறிவிப்பு

Published : Apr 24, 2025, 12:13 PM IST

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஜூன் 3 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப நல நீதிமன்றங்களுக்கும் மே 1 முதல் 15 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உயர்வு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

PREV
13
தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாள் விடுமுறை.! வெளியான அறிவிப்பு

Tamilnadu family welfare courts summer holiday : கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பகல் வேளைகளில் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலை நீடிக்கிறது. மேலும் வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் இதனால் ஒருசில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு முன் கூட்டியே முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தவிட்டது

23
Family welfare courts summer holiday

கொளுத்தும் வெயில்- நீதிமன்றங்களுக்கு விடுமுறை

இதனை ஏற்று துவக்கப்பள்ளிகளுக்கு கடந்த வாரம் விடுமுறை விடப்பட்டது. இன்று 6ஆம் வகுப்பு முதல் மற்ற பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்ததையொட்டி ஜூன் 3ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

33
court closure

குடும்ப நல நீதிமன்றத்திற்கு விடுமுறை

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடை விடுமுறையொட்டி, வரும் மே 1ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் குடும்ப நல நீதிமன்ற அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories