12th Supplementary Exam Hall Ticket: 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதும் மாணவர்களே! ஹால்டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி?

Published : Jun 19, 2025, 06:55 AM IST

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று முதல் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

PREV
16
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 39,352 மாணவர்கள் தோல்வி

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியானது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7,92,494 மாணவர்கள் எழுதினர். இதில் 3,73,178 மாணவர்களும், 4,19,316 மாணவிகளும் அடங்கும். இந்த தேர்வில் 3,47,670 மாணவர்களும், 4,05,472 மாணவிகள் என மொத்தம் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றனர். 39,352 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். மேலும், 10,049 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தும் தேர்வி எழுத வரவில்லை.

26
அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் இந்தாண்டே கல்லூரி சேரும் வகையில் துணைத் தேர்வுகள் நடத்தி முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். அதன்படி ஜூன் 25-ம் தேதி தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2025 தனித்தேர்வர்கள் நுழைவுச் சீட்டுகளை இன்று முதல் www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

36
அரசு தேர்வுகள் இயக்ககம்

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்: நடைபெறவுள்ள ஜூன்/ஜூலை 2025, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

46
ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் HALL TICKET" என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் "HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNE JULY 2025 HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தினை Click' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தரப் பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

56
தேர்வு மையம்

செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். ஜூன்/ஜூலை 2025, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

66
12-ம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணை 2025

ஜூன் 25 - தமிழ், ஜூன் 26 - ஆங்கிலம், ஜூன் 27 - கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது), ஜூன் 28 - கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழில்முறை), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், ஜூன் 30 - வேதியியல், கணக்கியல், புவியியல், ஜூலை 01 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை , ஜூலை 02 - இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன்கள் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories