திருநெல்வேலி மக்களே! வீட்டு வேலையை சீக்கிரமா முடிச்சுடுங்க! ஜூன் 2-ல் மின் தடை: எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?

Published : May 31, 2025, 11:14 PM IST

திருநெல்வேலி மின் தடை: ஜூன் 2 அன்று எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?

PREV
15
ஜூன் 2 அன்று மின் விநியோகம் நிறுத்தம்: கிராமப்புறப் பகுதிகள்

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் திரு. G.குத்தாலிங்கம் அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி,தாழையூத்து மற்றும் சீதபற்பநல்லூர் துணை மின் நிலையங்களில் வருகிற ஜூன் 2, 2025 திங்கள்கிழமை அன்று மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை பாதுகாப்பு கருதி கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்

25
மானூர் வட்டாரம்:

தாழையூத்து, சேதுராயன் புதூர், ராஜ வல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி, புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன் கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழ்கரும்புளியூத்து மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

35
நகர்ப்புறப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் திரு. செ. முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 33/11 KV தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் வருகிற ஜூன் 2, 2025 திங்கள்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பாதுகாப்பு கருதி கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்

45
தச்சநல்லூர்

தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வ விக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கிய நகர், தெற்கு பாலபாக்கிய நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்து பூந்துறை, மணி மூர்த்தீஸ்வரம் மற்றும் இருதய நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

55
கவனத்திற்கு: மின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு

இந்த மின் பராமரிப்புப் பணிகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், மின் விநியோக சீரமைப்புக்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, மின் தடை ஏற்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மின்தடை காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்வது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories