பென்சில் தொடர்பான வாக்குவாதம்! பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு! தடுக்க சென்ற ஆசிரியரும் ரத்த வெள்ளத்தில் அலறம்

School Student: பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஒரு மாணவன் சக மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Student stabbed with sickle over pencil argument in nellai tvk
Nellai School students

பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி

‘நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த இரு மாணவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த நிலையில் இரண்டு மாதத்திற்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

Student stabbed with sickle over pencil argument in nellai tvk
School students

பள்ளி மாணவர்களுக்கு இருவருக்கும் இடையே தகராறு

இன்று பேனா, பென்சில் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு மாணவன் தனது ஸ்கூல் பேக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மற்றொரு மாணவனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை தடுக்க சென்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. சக மாணவர்கள் அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டனர். 

இதையும் படிங்க: கோவை பக்கம் போயே 13 வருஷம் ஆகுது! நல்ல பிள்ளையா வாழ்ந்துட்டு வரேன்! கதறும் வரிச்சியூர் செல்வம்!


Admitted hospital

மாணவன் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரண்

இதனையடுத்து காயமடைந்த ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சக மாணவனை வெட்டிய 8-ம் வகுப்பு மாணவன் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் இருந்து அரிவாளை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக மாணவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் சக மாணவனை மற்றொரு மாணவன் வெட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Police investigation

போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே பென்சில் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த அரிவாள் வெட்டுச் சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

Latest Videos

vuukle one pixel image
click me!