குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் தொடர் விடுமுறை..!

First Published | Jul 27, 2023, 12:28 PM IST

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 18ம் தேதி புகழ்பெற்ற கடை ஏழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி விழா அரசு விழாவாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலர் கண்காட்சி, மூலிகை செடிகள் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளது.  இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 3ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

tasmac

இந்நிலையில், இந்த விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் ஆகஸ்ட் 01, 02 மற்றும் 03 ஆகிய தேதிகளில், கொல்லிமலையில் உள்ள செம்மேடு, செங்கரை மற்றும் சோளக்காடு ஆகிய பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய ஏரியாக்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை.!

Tap to resize

மேலும், இந்த நாட்களில் சம்மந்தப்பட்ட கடையை திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்வது தெரிய வந்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Latest Videos

click me!