கே.பி முனுசாமி கிட்ட தோற்றா உங்க பதவி காலி..! மாவட்ட செயலாளர்களை நேரடியாக எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின்

Published : Nov 09, 2025, 07:13 AM IST

2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை ஜோராக ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

PREV
14
திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் சூழல் நாள்தோறும் சூடுபிடித்து வருகிறது. இதனை முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், மற்றும் தேர்தல் களத் தயாரிப்புகள் குறித்து அவர் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

24
கிருஷ்ணகிரி திமுக நிர்வாகிகள்

அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளுடனும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில், மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் கட்சி நிலவரம், வாக்காளர் பதிவு பணிகள் மற்றும் எதிர்கட்சிகளின் தலைவர்கள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது என்று கூறப்படுகிறது. குறிப்பாக, SIR (Special Intensive Revision) பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால், சில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

34
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி

இதனால், ஒவ்வொரு திமுக நிர்வாகியும் வாக்காளர் விவரங்களை துல்லியமாகச் சேகரித்து, எவரும் வாக்குரிமையை இழக்காதபடி கவனிக்க வேண்டும் கடுமையாக அறிவுறுத்தினார். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி போட்டியிடும் தொகுதி திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என குறிப்பிடப்பட்டதாக தகவல் வந்துள்ளது. அந்த தொகுதியை எந்த எதிர்க்கட்சிக்கும் இழக்க கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “அந்த தொகுதியில் திமுக வெற்றி பெறாத பட்சத்தில் கட்சியின் மரியாதையும், மாவட்டத்தின் நம்பிக்கையும் பாதிக்கப்படும்” என்று அவர் தெளிவாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.

44
மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படும்

மேலும், ஓசூர், தளி, வேப்பனஹள்ளி போன்ற முக்கிய தொகுதிகளில் திமுக வெற்றி பெறாவிட்டால், அந்த மாவட்ட செயலாளர் பதவி பறி போகும் எனவும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தேர்தல் நேரத்தில் ஒருமைப்பாட்டோடு செயல்பட வேண்டும் என்பதையும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக திமுக வலுவாக பதிலளிக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். தேர்தல் வெற்றி என்பது பதவிகளுக்காக அல்ல, மக்களின் நம்பிக்கைக்காக நினைவூட்டிய முதலமைச்சர், கட்சி நிர்வாகிகள் மக்கள் மத்தியில் நேரடியாகச் செயல்படுவார்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் ஸ்டாலின் என்று திமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories