தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினந்தோறும் புது புது போட்டிகள், சண்டைகள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழர் பண்பாடு என்பது, நெஞ்சில் நாணம், வாழ்வில் ஒழுக்கம், நாவிலே நெறி என்று, பன்னெடுங்காலமாக வடிவெடுத்த ஒரு நாகரிகச் செல்வம். அந்த மகத்தான செல்வத்தை, இன்று ‘பொழுதுபோக்கு’ என்றப் பெயரில் அழிக்க முயலும் ஒரு வணிகப் பாம்பு தான், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி. தமிழர் மரபையும் மதிப்பையும் கேலி செய்து, சீரழிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய சமூகச் சீரழிவு.