கத்திரி வெயில் அதுவுமா இன்று எங்கெல்லாம் மின்தடை! எத்தனை மணிநேரம்? இதோ முழு விவரம்!

Published : May 09, 2025, 07:51 AM IST

தமிழகத்தில் அதிகரிக்கும் வெயிலின் காரணமாக மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும். 

PREV
15
கத்திரி வெயில் அதுவுமா இன்று எங்கெல்லாம் மின்தடை! எத்தனை மணிநேரம்? இதோ முழு விவரம்!
மாதாந்திர பராமரிப்பு பணிகள்

தமிழகத்தில் மே 4ம் தேதி கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்று சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை விரிவாக பார்ப்போம். 

25
ராமாபுரம்

வள்ளுவர்சாலை, பஜனை கோவில், அரசமரம் சந்திப்பு, ஆனந்தம்நகர், பாரதி சாலை, டி.என்.எச்.பி., ஸ்ரீராம் நகர்,  சபரி நகர், தமிழ் நகர், குறிஞ்சி நகர், கங்கை அம்மன் கோவில் சாலை, அம்பாள் நகர், ரத்தின வளாகம், பிரகாசம் தெரு, செந்தமிழ் நகர், சாலரங்கம், சத்ரியர் நகர், கொத்தரை நகர், கலசாத்தம்மன் கோவில் தெரு, ராயலா நகர், எஸ்ஆர்எம் திருமலை நகர், பெரியார் சாலை, குரு ஹோம்ஸ், நேரு நகர், பொன்னம்மாள் நகர், ராஜீவ் காந்தி நகர், காமராஜர் சாலை, கங்கை அவென்யூ, சாந்தி நகர் ஆகிய பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

35
முகலிவாக்கம்

மவுண்ட் பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் மெயின் ரோடு, கமலா நகர், சுபஸ்ரீ நகர், எம்.கே.எம் நகர், கிருஷ்ணா நகர், ராம்னி கோவில், மாரியம்மன் கோவில், எம்.கே.எம் குருசாமி நகர், CRR புரம், காவ்யா கிராண்டன், காசா கிராண்டா, ஆறுமுகம் நகர், திருநகர், கணேஷ் நகர், மணப்பாக்கம் கிராமம், ராமமூர்த்தி அவென்யூ, ஏவி மல்லிஸ் கார்டன், டிரைமேக்ஸ், விவி கோவில் தெரு, பெருமாள் தெரு, ஏஜிஎஸ் காலனி, மேட்டுக்குப்பம், ஏஜிஆர் கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். 
 

45
ராதா நகர்

கண்ணன் நகர், ராதா நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லட்சுமி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், ராதா நகர் மெயின் ரோடு, காந்தி நகர், சுபாஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
 

55
பட்டாபிராம்

CTH சாலை, திருவள்ளூர் நகர், கக்கன்ஜி நகர், சத்திரம், காமராஜபுரம், சோழன் நகர், ஐயப்பன் நகர், விஜிவி நகர், கண்ணப்பாளையம், தனலட்சுமி நகர், விஜிஎன் 2 முதல் 7 வரை, மேலப்பாக்கம், வள்ளுவர் சாலை, பஜனை கோவில், அரசமரம் சந்திப்பு, ஆனந்தம் நகர், பாரதி சாலை, TNHB, ஸ்ரீராம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories