இந்நிலையில், தமிழ்நாட்டில் இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா 2 ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் அடுத்த மாதம் முதல் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை - திருநெல்வேலி, சென்னை - செங்கோட்டை
இதேபோல் சென்னை - மங்களூரு எக்ஸ்பிரஸ், சென்னை மேட்டுப்பாளையம் - நீலகிரி எக்ஸ்பிரஸ், திருச்சி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டிகளும், சென்னை - திருநெல்வேலி, சென்னை - செங்கோட்டை, நாகர்கோவில் - மும்பை, கன்னியாகுமரி புதுடெல்லி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இணைக்கபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.