பரதத்தில் தனித் திறனால் மிளிர்கிறார் ரிதன்யா...! அமைச்சர் விஜய பாஸ்கர் மகளை புகழ்ந்து தள்ளிய முதல்வர்..!

First Published Feb 7, 2021, 10:36 AM IST

அமைச்சர் விஜயபாஸ்கர் - ரம்யா தம்பதிகளின் மகள், ரிதன்யா பிரியதர்ஷினியின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தெலுங்கானா கவர்னர் தமிழிசை, இசையமைப்பாளர் இளையராஜா, உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
 

அமைச்சர் விஜயபாஸ்கர் - ரம்யா தம்பதிகளின் மகள், ரிதன்யா பிரியதர்ஷினியின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தெலுங்கானா கவர்னர் தமிழிசை, இசையமைப்பாளர் இளையராஜா, உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
undefined
சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் கலையரங்கத்தில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்றத்தில், தொடர்ந்து இரண்டரை மணி நேரம் பரதம் ஆடி அசத்தினார் ரிதன்யா பிரியதர்ஷினி.
undefined
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், இசை அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை ராதிகா, உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு ரிதன்யாவின் பரத நாட்டியத்தை கண்டு ரசித்தனர்.
undefined
அமைச்சர் விஜய பாஸ்கர் மகள், ரிதன்யாவின் பரத நாட்டியத்தை பார்த்துவிட்டு முதல்வர் பேசுகையில், ''நாட்டிய குடும்ப பின்னணி இல்லாமல், தன் ஆர்வத்தாலும், உழைப்பாலும், இந்த கலையை திறம்பட கற்று, தன் தனித் திறமையை ரிதன்யா சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் என்று புகழ்ந்துள்ளார்.
undefined
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், பாசம், பரிவு, பக்தி, உள்ளிட்ட பல்வேறு பாவங்களை, அருமையாக வெளிப்படுத்திய ரிதன்யாவை பாராட்டுகிறேன், என புகழ்ந்தார்.
undefined
தெலுங்கானா கவர்னர் தமிழிசையும், ரிதன்யா மற்றும் அவரது குரு ஊர்மிளா சத்தியநாராயணன் ஆகியோரை வெகுவாக பாராட்டி கேடயங்களைவழங்கினார்.
undefined
பரதக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன் ரிதன்யா ஒவ்வொரு அசைவுகளையும் அனுபவித்து ஆடியதாகவும், அவரது உடல் மொழி மற்றும் பரத்தில் கண் பேசியதாக கூறி வாழ்த்தினார்
undefined
9 ஆம் வகுப்பு படித்து வரும் ரிதன்யா பிரியதர்ஷினி... தன்னுடைய 5 வயதில் இருந்தே நாட்டியா ஸங்கல்பா அமைப்பின் இயக்குனர் ஊர்மிளா சக்திநாராயணனிடம் பரதம் கற்று வருகிறார். நவராத்திரி விழா, சென்னையில் திருவையாறு உள்ளிட்ட பல முக்கிய நிகழ்ச்சிகளில் தன்னுடைய குருவுடன் மேடை ஏறி பரதம் ஆடி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!