இவங்கலாம் மனசாட்சி இருக்குற மனுசங்க தானா..? ஒருநாள் கறி சாப்பிடலைனா என்ன..? இந்த கொடுமைய பாருங்க

First Published Apr 12, 2020, 3:14 PM IST

கொரோனாவை தடுக்க சமூக விலகலை கடைபிடிப்பதும் தனிமைப்படுதலுமே ஒரே வழி என்பதால், நாட்டு மக்களை காக்க, பல்வேறு சவால்களை சமாளித்து பொருளாதார இழப்புகளையெல்லாம் பொருட்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி, கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றன.

அரசு தரப்பில் மக்களிடம் இருந்து ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. ஆனால் அதைக்கூட தராமல், அலட்சியமாக நடந்துகொள்கின்றனர். சென்னை புளியந்தோப்பில், ஞாயிற்றுக்கிழமையான இன்று கறி வாங்குவதற்காக, சமூக விலகல் என்ற ஒரு விஷயத்தை கொஞ்சம் கூட மதிக்காமல் மக்கள் கூட்டமாக கூடினர். இவர்களால் இவர்களை சார்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரச்னை என்பதை உணராத அலட்சியத்தின் வெளிப்பாடுதான் இது. மாஸ்க்கை முறையாக அணியாமல், சமூக விலகலை கடைபிடிக்காமல் கறி வாங்க கூடிய கூட்டத்தின் புகைப்பட தொகுப்பு இதோ..
 

கறி வாங்கணும்... கேட் எப்ப திறப்பீங்கனு காத்திருந்த கூட்டம்
undefined
ஒரு அடி கூட இடைவெளி இல்ல
undefined
கழுத்துக்கு மட்டும் மாஸ்க்
undefined
மார்க்கெட்ல வந்து குசலம் விசாரிப்பு
undefined
click me!