அதிகாலையிலேயே சென்னையில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை! சுரங்கபாதையில் சூழ்ந்த தண்ணீர்! போக்குவரத்து பாதிப்பு!

Published : Aug 22, 2025, 07:51 AM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

PREV
15
வானிலை மையம்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி. மின்னலடன் வடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது மதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும் குறைபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

25
சென்னையில் கனமழை

இந்நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. அதாவது கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், கோடம்பாக்கம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, அடையாறு, மயிலாப்பூர், வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, பல்லாவரம், ஆவடி, புழல், அண்ணாநகர் தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

35
சுரங்கப் பாதையில் தண்ணீர் சூழ்ந்தது

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் நுங்கம்பாக்கம் சுரங்கப் பாதையில் தண்ணீர் சூழ்ந்தது. இதன் காரணமாக சுரங்கப் பாதையில் இருசக்கர வாகனங்கள், கார்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதேபோன்று தியாகராய நகரில் உள்ள துரைசாமி சுரங்கப் பாதையிலும் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

45
இன்றிரவு மற்றும் நாளை இரவிலும் மழை பெய்யும்

இதனிடையே வளிமண்டலத்தில் காற்றின் வேகமாறுபாடு காரணமாக கனமழை பெய்த வருகிறது. இன்றிரவு மற்றும் நாளை இரவில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

55
31 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் காலை 8 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 31 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories