Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய ஏரியாக்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை.!

First Published | Jul 27, 2023, 6:27 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எழும்பூர், ஐடி காரிடார், தாம்பரம், கிண்டி, ஆவடி, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 
 

எழும்பூர்:

கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்புகள், மருத்துவக் கல்லூரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர், புல்லாரெட்டி புரம், நேரு பூங்கா மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

Tap to resize

தாம்பரம்:

சிட்லபாக்கம் ராகவேந்திரா சாலை, எம்எம்டிஏ நகர், திருமுருகன் சாலை பள்ளிக்கரணை ஐஐடி காலனி, ஆறுமுகம் நகர், விஜிபி சாந்தி நகர், இன்ஜினியர்ஸ் அவென்யூ, மீனாட்சி நகர், செந்தில் நகர் பல்லாவரம் காவல் நிலையம், சீனிவாச பெருமாள் கோயில் தெரு, ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் தெரு, இந்திரா காந்தி சாலை, ஆஞ்சநேயர் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சித்தலாப்பாக்கம் மகேஸ்வரி நகர், விஜயபுரம், டி.வி. நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, சாஸ்தா நகர், கோவிலஞ்சேரி, நூத்தஞ்சேரி இணைப்புச் சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு, பவானி நகர், ஐஸ்வர்யா கார்டன், பெருங்களத்தூர் மங்கள் அபார்ட்மென்ட், ஜி.கே.எம் காலேஜ் ரோடு, ஜெய் வாட்டர், கே.கே.நகர், பெருமாள்புரம், எஸ்.வி. பார்ம்ஸ்  மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

ஐடி காரிடார்:

துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம், வ.ஊ.சி தெரு, பி.டி.சி குடியிருப்பு, சக்தி தோட்டம், சி.டி.எஸ், ஒக்கியம்பேட்டை, கண்ணகி நகர், டி.என்.எஸ்.சி.பி காரப்பாக்கம்,  ஐ.ஏ.எஸ் காலனி, எம்.ஜி.ஆர். தெரு சிறுச்சேரி சிப்காட் புதுப்பாக்கம் பிரதான சாலை, எம்.ஆர்.ராதா சாலை பெருங்குடி வீரமணி சாலை, பாலராஜ் நகர், சந்தோஷ் நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

கே.கே.நகர்:

சின்மையா சாய் நகர், காளி அம்மன் கோயில் தெரு, சாய்பாபா காலனி, ரத்னா நகர், கம்பர் தெரு, காந்தி நகர் விருகம்பாக்கம், வாரியார் தெரு, இந்திரா நகர், ராஜீவ் காந்தி தெரு, ஜெயின் அபார்ட்மென்ட், பாலாஜி நகர் தசரதபுரம் எஸ்பிஐ காலனி 1,2,3 மற்றும் சுற்றியுள்ள னைத்து பகுதிகளும் அடங்கும்.

கிண்டி:

செயின்ட் தாமஸ் மவுண்ட் மாங்காளியம்மன் வளைவு, பூந்தோட்டம் 2, 3 & 4 வது தெரு, நந்தம்பாக்கம், நசரதபுரம், காரையார் கோயில் தெரு நங்கநல்லூர் வோல்டாஸ் காலனி, அய்யப்பா நகர், எஸ்பிஐ காலனி மற்றும் அனைத்திற்கும் மேலாக சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர்:

முடிச்சூர் எட்டையபுரம், நடுவீரப்பட்டு, தர்ஷன் கார்டன், பிங்க் ஹவுஸ் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

ஆவடி:

சாந்திபுரம், பாலாஜி நகர், மணிகண்ட புரம், கலைஞர் நகர், திருமுல்லைவாயல் ஐஸ்வர்யம் நகர், செல்வி நகர், சிவா கார்டன், ஜெயலட்சுமி நகர், அலமாதி பாபா கோயில், வேல்டெக் சந்திப்பு, ஷீலா நகர், மோராய் எஸ்டேட் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

அம்பத்தூர்:

திருவேற்காடு புலியம்பேடு, நீதிபதிகள் காலனி, பாலாஜி நகர், பி.எச். சாலை, ஐஸ்வர்யா கார்டன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

மாதவரம்:

சி.எம்.பி.டி.டி ஜி.என்.டி. சாலை, சிவா கணபதி நகர், ஜவஹர்லால் நேரு 200 அடி சாலை, ஏரிக்கரை சாலை, அருண் ஹோட்டல் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

வியாசர்பாடி:

ஓ.எச்.பி எஸ்.என் செட்டி தெரு, நியூ அமர்ஜிபுரம், நியூ காமராஜ நகர், புதுமனைக்குப்பம் மசூதி, எம்.எல்.ஏ அலுவலகம், சிங்காரவேலன் நகர், பவர் குப்பம், ஓய்.எம்.சி.ஏ. குப்பம் 1 முதல் 12வது தெரு, ஜி.எம்.  பேட்டை குடியிருப்பு, ராஜவேலு தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!