Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

First Published | Jul 26, 2023, 7:11 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, அம்பத்தூர், ஆவடி, அடையார், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

தாம்பரம்:

கடப்பேரி பச்சைமலை வீட்டு வசதி வாரியம், டி.பி மருத்துவமனை, ஜி.எஸ்.டி. சாலை, ஜி.எச்., நியூ காலனி 13, 14 & 17 குறுக்குத் தெரு, பெருங்களத்தூர் பாரதி அவென்யூ, பாலாஜி நகர், குறிஞ்சி நகர், எம்.கே.பி. நகர், முத்துஇருளாண்டி தெரு, பெரும்பாக்கம் சௌமியா நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர், விமலா நகர், நீலா நகர், நல்லதம்பி நகர்,  மெப்ஸ், ஒய்யாளியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, தெற்கு மற்றும் கிழக்கு மாட தெரு, நன்மங்கல் சாலை, அருள்முருகன் நாதவம் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

Tap to resize

கிண்டி:

நங்கநல்லு 100 அடி சாலை, டி.என்.ஜி.ஓ. காலனி, கன்னிகா காலனி, லட்சுமி நகர், உள்ளகரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

போரூர்:

ஆர்.இ.நகர், ஜெய பாரதி நகர், குருசாமி நகர், திருவேற்காடு குப்புசாமி நகர், காடுவெட்டி, ஆவடி மெயின் ரோடு, செம்பரம்பாக்கம் மேப்பூர், ஆகரம்மேல், மலையம்பாக்கம் பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோயில் தெரு, சுந்தர் நகர், கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

ஐடி காரிடார்:

பெருங்குடி பஞ்சாயத்து சாலை, வர்கீஸ் குடியிருப்புகள், தோஷி குடியிருப்புகள் தரமணி, அண்ணா நெடுஞ்சாலை, டெலிபோன் நகர், ராஜலட்சுமி அவென்யூ, ஆனந்தா எஸ்டேட், நேதாஜி நகர், சத்யா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

அம்பத்தூர்:

அயப்பாக்கம் மேல் அயனம்பாக்கம், பெருமாள் கோயில், பச்சையப்பன் நகர் டி.என்.எச்.பி., டி.ஜி. அண்ணா நகர், வானகரம் ஜெ.ஜெ. நகர் சர்ச் சாலை, ஜி.ஜி. நகர் கிழக்கு முகப்பேர் கலெக்டர் நகர், படிபுது நகர், கலைவாணர் காலனி, பாடி கொரட்டூர் பேருந்து நிலையம், டி.என்.எச்.பி. ரயில் நிலையம், எம்.டி.எச். சாலை, யாதவா தெரு, வடக்கு மாட தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.

ஆவடி:

புதிய போலீஸ் குடியிருப்பு, ரெட்ஹில்ஸ் லட்சுமிபுரம், பெரியார் நகர், காந்தி நகர், புழல் ராசி நகர், பிரிட்டானியா நகர், செந்தில் நகர், ஜி.என்.டி சாலை, நாகப்பன் எஸ்டேட், பாலாஜி நகர், கோமதியம்மன் நகர், தர்காஸ் சாலை, சிங்கிளிமேடு, கண்ணம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். 

வண்ணாரப்பேட்டை:

ஜோதி நகர், கலைஞர் நகர், மணலி எக்ஸ்பிரஸ் சாலை, நேதாஜி நகர், பாரதியார் நகர், ஜேஜே நகர், டிஎன்எஸ்சிபி குடியிருப்பு, ஏஐஆர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

அடையார்:

திருவான்மியூர் ருக்குமணி சாலை, எம்ஜிஆர் சாலை, எல்பி சாலை, பரமேஸ்வரி நகர், சிபிடி வளாகம், திருவீதியம்மன் கோயில் தெரு, காமராஜ் நகர், ரங்கநாதபுரம், பெரியார் நகர், வெங்கடரத்தினம் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

கே.கே.நகர்:

அஞ்சல் காலனி 1வது தெரு, கோடம்பாக்கம் ஆற்காடு சாலை, காவேரி தெரு, விருகம்பாக்கம் ஹொரைசன் அபார்ட்மென்ட் சிம்மியா நகர், கிரஹலட்சுமி குடியிருப்புகள், ஜெயின் குடியிருப்புகள், அரும்பக்கம் சக்தி நகர், கில் நகர், திருவள்ளுவர்புரம் SAF GAMES நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!