தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
கிட்ஸ் பார்க் கணபதிபுரம், வரதராஜபுரம், ஆர்.ஜி.நகர், அம்பேத்கர் தெரு, நாகாத்தம்மன் தெரு மடம்பாக்கம் விஜிபி சீனிவாச நகர் முழுவதும், சரஸ்வதி நகர், சரவணா நகர், டெல்லஸ் பகுதி - I II, காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
பூமகள் மெயின் ரோடு, விஓசி தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பூந்தமல்லி சாலை மடிப்பாக்கம் கக்கன் தெரு, ஏஜிஎஸ் காலனி நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலை, நேரு காலனி, குமரன் தெரு புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகர், வேலாயுதம் நகர், ஆதம்பாக்கம் புதிய காலனி 1 முதல் 11 தெரு வரை, கணேஷ் நகர், டி.ஜி.நகர், ராம் நகர், இந்திரா நகர், இந்திரா நகர் செயின்ட் தாமஸ், மாங்காளியம்மன் வளைவு, நந்தம்பாக்கம், நசரத்புரம் ராஜ்பவன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தேவர் திடல் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
போரூர்:
செம்பரம்பாக்கம் பனிமலர் மருத்துவக் கல்லூரி, டிரங்க் ரோட்டின் ஒரு பகுதி, வரதராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பெரம்பூர்:
செம்பியம் காமராஜர் சாலை, டி.எச்.ரோடு, எம்.எச்.ரோடு, ரம்மனா நகர், கட்ட பொம்மன் தெரு, ரேணுகா அம்மன் கோயில் தெரு, டி.வி.கே.நகர், பல்லவன் சாலை, வியாசர்பாடி, மூலக்கடை, அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் தெரு, ராயல் அவென்யூ, ராயல் அவென்யூ, திருவேங்கடம் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.