பேருந்து பயணிகளுக்கு மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்!

First Published | Jan 20, 2025, 8:15 PM IST

சென்னையில் MTC பேருந்துகளில் பயணிப்போருக்கு மாதாந்திர பயண அட்டை பெறும் கால அவகாசம் பொங்கல் விடுமுறை காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநகரப் பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் மற்றும் தினமும் வேலைக்கு செல்பவர்கள் மாதாந்திர சலுகை பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரூ.1000 மாதாந்திர அட்டையானது குறிப்பிட்ட நாட்களில் மட்டும் வழங்கப்படுகிறது.

chennai mtc bus

அதாவது ஒவ்வொரு மாதமும்  16ம் தேதி வரை மட்டுமே மாதாந்திர பயண அட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் பொங்கல் விடுமுறை காரணமாக காரணமாக மாதாந்திர பயண அட்டை பெறும் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


mtc bus

இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், 2025 ஜனவரி 16-ம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரையிலான செல்லதக்க, விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை, மாதந்தோறும் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை, 2025 ஜனவரி 11-ம் தேதி முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரையிலான செல்லத்தக்க 50% மாணவர் சலுகை பயண அட்டை மாதந்தோறும் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை அனைத்து மா.போ.கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

chennai mtc bus

எனினும், 13.01.2025 தேதி முதல் 17.01.2025 வரை பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, பயணிகள் நலன்கருதி இந்தமுறை மாதாந்திர சலுகை (MST) மாணவர் சலுகை பயண அட்டை (SCT) மற்றும் ரூ.1000 மதிப்பிலான TAYPT பயண அட்டையின் விற்பனை 24.01.2025 அன்று வரை நீட்டிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். எனவே, பயணிகள் இதனை பயன்படுத்தி பயன் அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!