Chennai IT Manager : “அண்ணா” என்று அழைப்பார்களே.. எப்படி வேலையை விட்டு நீக்குவேன்? 12 ஊழியர்களுக்காக கண்கலங்கிய சென்னை ஐடி மேலாளர்!

Published : Nov 03, 2026, 03:22 PM IST

Chennai IT Manager : 10 ஆண்டுகளாக ஒன்றாகப் பணியாற்றிய 12 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவு. “அண்ணா” என்று அழைக்கும் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடியாமல் தவிக்கும் சென்னை ஐடி மேலாளரின் உருக்கமான பதிவு வைரல்.

PREV
17
ஐடி மேலாளரின் உருக்கமான பதிவு

10 ஆண்டுகளாக ஒன்றாகப் பணியாற்றிய 12 ஊழியர்கள்.. வீட்டுக்கடன், புற்றுநோய் சிகிச்சை, குழந்தை பிறப்பு என குடும்பப் பொறுப்புகள்.. வெறும் 15 நிமிடத்தில் வேலையைப் பறிக்கும் முடிவு. சென்னை ஐடி மேலாளரின் உருக்கமான பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

அலுவலகத்தில் சக ஊழியர்களாகத் தொடங்கிய உறவு, காலப்போக்கில் குடும்ப உறவாக மாறிவிடும். ஒன்றாகச் சிரித்து, ஒன்றாகச் சாப்பிட்டு, இரவு பகலாக வேலை செய்து, ஒருவரின் குடும்ப நிகழ்வுகளில் மற்றொருவர் பங்கேற்கும் அந்தப் பிணைப்புக்கு பெயர் சொல்ல முடியாது.

அப்படிப்பட்ட உறவுகளுக்கு நடுவே, ஒருநாள் திடீரென "இவர்களை வேலையை விட்டு நீக்கிவிடுங்கள்" என்று உத்தரவு வந்தால்?சென்னையைச் சேர்ந்த ஐடி நிறுவன மேலாளர் ஒருவர் எதிர்கொண்டிருக்கும் இந்தச் சூழல், பலரையும் நெகிழ வைத்துள்ளது.

தன்னுடன் சுமார் 10 ஆண்டுகளாகப் பணியாற்றிய 12 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற உயர் அதிகாரிகளின் உத்தரவு, அவரை மனதளவில் உடைத்துள்ளது.

தன்னை "அண்ணா" என்று அன்புடன் அழைக்கும் ஊழியர்களிடம், இனி உங்களுக்கு வேலை இல்லை என்று எப்படிச் சொல்வது என அவர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு, பணிநீக்கத்தின் பின்னால் இருக்கும் மனித உணர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

27
10 ஆண்டுகால உறவை முடிக்கச் சொன்ன உயர் அதிகாரிகள்

சென்னையில் உள்ள முன்னணி ஐடி நிறுவனத்தில் டெலிவரி மேனேஜராகப் பணியாற்றும் ஒருவர், தனது அனுபவத்தை Reddit தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவின்படி, உயர் அதிகாரிகள் அவரை அழைத்து, 12 ஊழியர்களின் பெயர்கள் அடங்கிய Excel பட்டியலைக் கொடுத்துள்ளனர். அந்த ஊழியர்கள் அனைவரையும் வெள்ளிக்கிழமைக்குள் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் 15 நிமிடங்கள் பேசி இந்த முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

37
“அண்ணா” என்று அழைப்பார்களாம்

அன்புடன் "அண்ணா" என்று அழைப்பார்களாம்

ஆனால், அந்தப் பட்டியலில் இருந்தவர்கள் அவருக்கு வெறும் ஊழியர்கள் அல்ல. 2016 ஆம் ஆண்டு முதல் அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள். அலுவலகத்தில் இரவு 3 மணி வரை விழித்திருந்து தொழில்நுட்பப் பிரச்சினைகளைச் சரிசெய்தவர்கள்.

ஒன்றாக உணவருந்தியவர்கள், தேநீர் குடித்தவர்கள், ஒருவரின் திருமணத்தில் மற்றொருவர் கலந்து கொண்டவர்கள் என நீண்டகால உறவைப் பகிர்ந்தவர்கள். அந்த ஊழியர்கள் அவரை அன்புடன் “அண்ணா” என்று அழைப்பார்களாம்.

47
ஊழியர்களின் குடும்பச் சூழல்

வீட்டுக்கடன் முதல் புற்றுநோய் சிகிச்சை வரை

அந்த 12 பேரில் ஒரு மூத்த டெவலப்பர், சில மாதங்களுக்கு முன்புதான் சொந்த வீடு வாங்குவதற்காகப் பெரிய அளவில் வீட்டுக்கடன் பெற்றுள்ளார். மற்றொரு ஊழியரின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மருத்துவச் செலவுகளுக்கு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீடு மிகவும் முக்கியமானதாக இருப்பதாக மேலாளர் தெரிவித்துள்ளார்.

இன்னொரு ஊழியரின் மனைவி அடுத்த மாதம் குழந்தையைப் பெற்றெடுக்க உள்ளார். இப்படி ஒவ்வொருவருக்கும் குடும்பப் பொறுப்புகள், கடன் சுமைகள், மருத்துவச் செலவுகள் என பல்வேறு சவால்கள் இருக்கின்றன.

"இவர்களைப் பார்த்து, உங்கள் வேலை முடிந்துவிட்டது, பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள் என்று எப்படிச் சொல்வது?" என்று மேலாளர் பதிவிட்டுள்ளது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

57
மனதுக்குள் போராடும் மேலாளர்

ராஜினாமா செய்துவிடலாமா?

இந்தப் பணிநீக்க உத்தரவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, தானே வேலையை ராஜினாமா செய்துவிடலாமா என்ற எண்ணமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால், அவர் வேலையை விட்டுச் சென்றாலும் அந்த 12 பேரின் பணிநீக்கம் தடுக்கப்படாது. வேறொரு மேலாளர் வந்து அதே உத்தரவை நிறைவேற்றுவார் என்பதை அவரது மனைவி எடுத்துரைத்ததாகவும் அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனால், ஒருபுறம் தனது குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பு. மறுபுறம் தன்னை நம்பியிருக்கும் ஊழியர்களின் வாழ்க்கை என இரண்டுக்கும் இடையில் அவர் தவிப்பதாகக் கூறியுள்ளார்.

67
“குட் மார்னிங் அண்ணா”

“குட் மார்னிங் அண்ணா” என்று மீண்டும் சந்திக்கும்போது

இந்தப் பதிவில் பலரையும் அதிகம் நெகிழ வைத்தது, அடுத்த நாள் அலுவலகத்தில் அந்த ஊழியர்களை எப்படி எதிர்கொள்வது என்ற அவரது கேள்விதான்.

தினமும் தன்னைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே “குட் மார்னிங் அண்ணா” என்று சொல்லும் ஊழியர்கள், தனது குடும்பத்தைப் பற்றியும் விசாரிப்பார்கள். அவர்களிடம் இப்போது பணிநீக்கச் செய்தியைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் ஒன்றாகப் பணியாற்றியவர்களின் வாழ்க்கையில், ஒரு சில நிமிட உரையாடல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற உணர்வு அவரை வேதனைப்படுத்தியுள்ளது.

77
பணிநீக்கத்தின் பின்னால் இருக்கும் மனித உணர்வுகள்

இந்தச் சம்பவம், நிறுவனங்களில் பணிநீக்க முடிவுகள் எடுக்கப்படும்போது அதன் பின்னால் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

உயர் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளை ஊழியர்களிடம் தெரிவிக்கும் பொறுப்பு பல நேரங்களில் நடுநிலை மேலாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால், அந்த முடிவால் பாதிக்கப்படும் ஊழியர்களின் குடும்பச் சூழல், உணர்வுகள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றையும் அவர்கள் நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

சென்னை ஐடி மேலாளரின் இந்தப் பதிவு, வேலை என்பது சம்பளம் பெறுவதற்கான இடம் மட்டுமல்ல. சில நேரங்களில் அது நம்பிக்கை, நட்பு, குடும்ப உறவு போன்றவற்றையும் உருவாக்குகிறது என்பதை நினைவூட்டுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories