தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். முதலில் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சனுக்கு பதிலாக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமா நாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷுக்கு பதிலாக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஷகில் அக்தர் குற்றப்பிரிவு சிஐடி-யின் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்சம் ஒழிப்புத்துறை டிஜிபி-யாக கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை நிர்வாக ஏடிஜிபி-யாக ரவியும், உளவுத்துறை ஐஜி-யாக ஆசியம்மாள், உளவுத்துறை ஐஜியாக (உள்துறை பாதுகாப்பு) ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.