பவுலிங்கில் கலக்கிய 'லார்ட்' ஷர்துல் தாகூர்! ஹைதராபாத்தை 200 ரன்களுக்குள் முடக்கிய லக்னோ!
ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 190 ரன்கள் எடுத்தது.'லார்ட்' ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 190 ரன்கள் எடுத்தது.'லார்ட்' ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
IPL: Sunrisers Hyderabad vs Lucknow Supergiants: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய 7வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிரடி மன்னன் அபிஷேக் சர்மா 6 ரன்னில் ஷர்துல் தாக்கூர் பந்தில் கேட்ச் ஆனார். மற்றொரு அதிரடி வீரர் இஷான் கிஷான் வந்த வேகத்தில் ஷர்துல் தாக்கூர் பந்தில் டக் அவுட் ஆனார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடினார். ஒரு சில சிக்சர்கள் விளாசிய டிராவிஸ் ஹெட் 28 பந்தில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்து பிரின்ஸ் யாதவ் பந்தில் கிளீன் போல்டானார்.
ஐபிஎல்: 14வது பிறந்தநாள் கொண்டாடிய ராஜஸ்தான் வீரர்! ரசிகர்கள் வாழ்த்து மழை!
இதன்பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரன் வேகம் குறைந்தது. தொடர்ந்து அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசன் (26 ரன்), நிதிஷ்குமார் ரெட்டி (32 ரன்) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். சிறிது நேரம் அதிரடி காட்டிய அன்கீத் வர்மா 13 பந்தில் 5 சிக்சர்களுடன் 36 ரன்கள் விளாசி அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 4 பந்தில் 3 சிக்சர்களுடன் 18 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழந்து 190 ரன்கள் எடுத்தது.
லக்னோ தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். இந்த போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. முன்கூட்டியே திட்டமிட்டு சரியான லைன் அண்ட் லெந்த்தில் பந்து வீசினார்கள். இதனால் அதிரடிக்கு பெயர் போன ஹைதராபாத் அணியால் 200 ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை. மேலும் சில கேட்ச்களை லக்னோ வீரர்கள் கோட்டை விட்டனர். அந்த கேட்ச் மட்டும் பிடித்து இருந்தால் இன்னும் குறைவான ஸ்கோர்களின் ஹைதராபாத் அணியை முடக்கி இருக்க முடியும். 191 என்ற் சவாலான இலக்கை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்கிறது.
ஐபிஎல் 2025! லைவ் ஸ்கோர் மற்றும் அப்டேட்களுக்கு ஏசியாநெட் தமிழுடன் இணைந்திருங்கள்!