Pitch controversy: What is the future of the KKR team?: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடந்து வருகிறது. போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி அணியிடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த கேகேஆர் அணி நேற்று கவுகாத்தியில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
24
KKR, Cricket, IPL
இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஈடன் கார்டன் பிட்ச்சை வடிவமைத்த சுஜன் முகர்ஜி மீது கொல்கத்தா கேப்டன் அஜிங்யா ரஹானேவும், கொல்கத்தா அணி நிர்வாகமும் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஐபிஎல்லில் சொந்த மைதானத்தில் விளையாடும் அணிகள் பிட்ச் வடிவமைப்பாளரிடம் தங்கள் அணிக்கு ஏற்றார்போல் பிட்ச் வடிவமைத்துக் கொள்ளலாம்.
உதாரணத்துக்கு சிஎஸ்கே அணி நிறைய ஸ்பின்னர்களை வைத்துள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் பிட்ச்சை ஸ்பினுக்கு சாதகமாக வடிவமைக்கும்படி பிட்ச் வடிவமைப்பாளரிடம் தெரிவித்து விடும். அந்த பிட்ச் வடிவமைப்புக்கு சிஎஸ்கே நிர்வாகமே பணம் செலுத்தும். ஐபிஎல்லில் சொந்த மைதானத்தில் விளையாடும் அணிகள் அனைத்தும் இதே நடைமுறையைத் தான் பின்பற்றுகின்றன. இதே போலத் தான் ஈடன் கார்டன் பிட்ச்சை ஸ்பின்னுக்கு சாதகமாக அமைக்கும்படி ரஹானே பிட்ச் வடிவமைப்பாளர் சுஜன் முகர்ஜியிடம் கூறியுள்ளார்.
ஆனால் அவர் ஸ்பின்னுக்கு ஏற்ற பிட்ச் அமைக்காமல் வேகத்துக்கு உகந்த பிட்ச் அமைத்துள்ளார். இத்தனைக்கும் பிட்ச் வடிவமைப்புக்கு கொல்கத்த்தா அணி பணம் கொடுத்தும் சுஜன் முகர்ஜி அணி நிர்வாகத்துக்கு ஏற்ற்படி செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக கொல்கத்தா கேப்டன் ரஹானேவும், அந்த அணி நிர்வாகமும் ஈடன் கார்டன் மைதானத்தை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தில் ஒன்று கொல்கத்தா அணி பிட்ச் வடிவமைப்பாளர் சுஜன் முகர்ஜியை மாற்றி விட்டு வேறு ஒருவரை நியமிக்கலாம்.
44
KKR Team, kolkata eden garden
இல்லையென்றால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் வேறு ஒரு நகரத்தின் பிட்ச்சை தேர்வு செய்து தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்ளலாம். இதற்கும் ஐபிஎல்லில் இடம் உண்டு. ஈடன் கார்டன் பிட்ச் வடிவமைப்பாளர் சுஜன் முகர்ஜியின் செயலை பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் கண்டித்துள்ளனர். ''சொந்த மைதானத்தின் அணி என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்ற மாதிரி தான் பிட்ச்களை வடிவமைக்க வேண்டும். அதுதான் அவர்களின் வேலை. இந்த விவகாரத்தில் கேகேஆர் அணி வேறு மைதானத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம். சொந்த அணி நிர்வாகம் தங்களுக்கு ஏற்றார்போல் 80% பிட்ச் வடிவமைத்துக் கொள்ள முடியும்'' என்றனர்.