சானியா மிர்சாவின் 2ஆவது திருமணம்: யார் அந்த மாப்பிள்ளை தெரியுமா? இதாவது உண்மையா? இல்ல இதுவும்..?

Published : Oct 17, 2024, 12:19 PM IST

Sania Mirza Second Marriage: சானியா மிர்சா இரண்டாவது திருமணம் செய்யத் தயாராகி வருவதாக ஊகங்கள் பரவி வருகின்றன. ஷமிக்கு பிறகு இப்போது மற்றொரு பிரபலத்தை திருமணம் செய்து கொள்ள போவதாக ஊகங்கள் பரவி வருகின்றன. யார் அந்த பிரபலம் என்று பார்க்கலாம் வாங்க…

PREV
110
சானியா மிர்சாவின் 2ஆவது திருமணம்: யார் அந்த மாப்பிள்ளை தெரியுமா? இதாவது உண்மையா? இல்ல இதுவும்..?
Sania Mirza Second Marriage

Sania Mirza Second Marriage: பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் உடனான திருமண விவாகரத்திற்கு பிறகு தனிமையில் இருக்கும் சானியா மிர்சா 2ஆவது திருமணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார். விரைவில், 2அவது திருமணம் நடைபெறும் என்று ஊகங்கள் பரவி வருகின்றன.

210
Sania Mirza 2nd Marriage

சோயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சா இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இவர்களுக்கு இஷான் மிர்சா என்ற ஒரு மகன் இருக்கிறான். விவாகரத்துக்கு பிறகு சோயிப் மாலிக் 3ஆவது திருமணமாக நடிகை சனா ஜாவேத்தை மணந்து கொண்டார்.

310
Sania Mirza Marriage

இதே போன்று தனிமையில் இருந்த சானியா மிர்சாவும் விரைவில் 2ஆவது திருமணம் செய்து கொள்வார் என்று தகவல் பரவி வந்தது. மேலும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் சானியா மிர்சா இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் பரவியது. உடனே, முகமது ஷமி மற்றும் சானியா மிர்சாவின் குடும்பத்தினர் விளக்கம் கொடுத்தனர்.

410
Sania Mirza

ஷமி கூறியிருப்பதாவது: இது வெறும் கட்டுக்கதை. எப்போது தொலைபேசியை எடுத்தாலே புகைப்படம் தான் வருகிறது. இதில் யாரையும் இழக்க விரும்பவில்லை. நீங்கள் பொழுதுபோக்கிற்காக உருவாகும் மீம்ஸ்கள் ஒருவரது வாழ்க்கை தொடர்பான என்பதை மனதில் வச்சுக்கோங்க என்று கூறியிருந்தார்

510
Sania Mirza 2nd Marriage

இதே போன்று சானியா மிர்சாவின் குடும்பத்தினரும் இந்த வதந்தி குறித்து மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தான் தற்போது துருக்கியில் இருக்கும் சானியா மிர்சா 2ஆவது திருமணத்திற்கு தன்னை தயார்படுத்தி கொண்டு வருகிறார் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.

610
Mohammed Shami, Sania Mirza

சானியா மிர்சா ஏற்கனவே சோயப் மாலிக்கை விவாகரத்து செய்துவிட்டார். சோயப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை மணந்து கொண்டார். சோயப் மாலிக்கிற்கு இது 3ஆவது கல்யாணம். அதே போன்று சனா ஜாவேத்துக்கு இது 2ஆவது திருமணம்.

710
Farah Khan and Sania Mirza

இப்போது சானியாவும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. பல்வேறு வீடியோ அறிக்கைகளின்படி, சோயப் மாலிக்கின் 3ஆவது மனைவியான சனா ஜாவேத்தின் முன்னாள் கணவரை சானியா மிர்சா மணக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

810
Sania Mirza Second Marriage

அவர் வேறுமில்ல, பாகிஸ்தான் பாடகர் உமாயர் ஜஸ்வால் தான். சனா மற்றும் உமாயர் இருவரும் 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதையடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு தான் சனா ஜாவேத் சோயிப் மாலிக்கை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

910
Sania Mirza Second Marriage

சமீபத்தில், உமாயர் ஷெர்வானியில் இருக்கும் தனது புகைப்படங்களை வெளியிட்டார். இவரது சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர் ஆகும். சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

1010
Sania Mirza Second Marriage

சானியா மிர்சா அவரை மணக்கப் போகிறாரா? அல்லது வேறு யாரையாவதா? என்பது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருப்பினும், சானியா மிர்சாவின் இரண்டாவது திருமணம் குறித்து அவரது குடும்பத்தினர் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories