சாய்னா நேவால் vs பருபள்ளி காஷ்யப்! சொத்து மதிப்பு யாருக்கு அதிகம் தெரியுமா?

Published : Jul 14, 2025, 03:54 PM IST

சாய்னா நேவால்-பருபள்ளி காஷ்யப் பிரிந்துள்ள நிலையில், சொத்து மதிப்பில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
Saina Nehwal vs Parupalli Kashyap Net Worth

இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும், பேட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பை விட்டு பிரிந்து விட்டதாக இன்று அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார். இருவரும் விவகாரத்து செய்வதாக ஒருமித்த முடிவு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

."வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நீண்ட யோசனைகளுக்கு பிறகு காஷ்யப்பும் நானும் பிரிவது என முடிவெடுத்துள்ளோம். அமைதி மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளதாக சாய்னா நேவால் கூறியிருக்கிறார்.

24
சாய்னா நேவால்-பருபள்ளி காஷ்யப் பிரிவு

இது தொடர்பாக பருபள்ளி காஷ்யப் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. சாய்னா நேவால், பருபள்ளி காஷ்யப் பிரவு ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இருவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்ப்போம். சாய்னா நேவாலை பொறுத்தவரை அவர் பிரபலமான விராங்கனை. அவரது நிகர மதிப்பு சுமார் ரூ.45 கோடி முதல் ரூ.50 கோடி வரை ($5 மில்லியன்) இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

சாய்னா நேவால் சொத்து மதிப்பு

பல்வேறு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிக் கொடி நாட்டியுள்ள சாய்னா நேவால், பரிசுகளை அள்ளிக்குவித்து அதன்மூலமும், போட்டிகளில் பங்கேற்றும் வருமானம் ஈட்டியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் இவர் பரிசுத் தொகைகள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் ரூ.16.54 கோடி வருமானம் ஈட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

34
ரூ.4 கோடி சொகுசு பங்களா

Yonex, BPCL, Herbalife, Rasna, Savlon, Kellogg's போன்ற பல முன்னணி பிராண்டுகளுக்கு விளம்பர தூதராக இருக்கும் சாய்னா நேவால், ஒரு விளம்ப்ரத்துக்கு சுமார் ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பெறுவதாகவும்,

விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.4 கோடி வருமனாம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி சில ஸ்டார்ட் அப்கள், மியூட்ச்வல் பண்ட் ஆகியவற்றிலும் முதலீடு செய்துள்ளார். சாய்னா நேவாலுக்கு ஹைதாராபாத்தில் ரூ.4 கோடிக்கு சொகுசு பங்களா உள்ளது.

சாய்னா வென்ற பட்டங்கள்

கார்களின் மீது அதிக விருப்பம் கொண்ட சாய்னா நேவால், பல கோடிகள் மதிப்பிலான‌ Mercedes AMG GLE 63BMW மற்றும் Mercedes-Benz போன்ற சொகுசு கார்களை வைத்துள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கமான வெண்கலத்தை வென்ற சாய்னா, 24 சர்வதேச பட்டங்களையும், 10 BWF சூப்பர் சீரிஸ் பட்டங்களையும் தன்வசம் வைத்துள்ளார். 2015ல் உலகின் நம்பர் 1 இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

44
பருபள்ளி காஷ்யப் சொத்து மதிப்பு என்ன?

பருபள்ளி காஷ்யப்பை பொறுத்தவரை ரூ.12.8 கோடி ( $1.5 மில்லியன்) நிகர சொத்து மதிப்பு கொண்டுள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று உச்சம் தொட்ட பருபள்ளி காஷ்யப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றதன்மூலமும் வருமானத்தை அள்ளியுள்ளார். இப்போது கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சியாளராக உள்ள அவர் அதன்மூலமும் வருமானம் ஈட்டுகிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories