BCCI's drastic decision: No cricket with Pakistan due to Pahalgam attack: ஜம்மு காஷ்மீரின் பஹல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த கோழைத்தனமாக தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் சோகத்துடன், கோபத்துடன் உள்ளனர். பஹல்ஹாம் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை பிடித்து கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு தண்டிப்போம் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
24
India vs Pakistan, Cricket
இனி பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடாது
இந்நிலையில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), எதிர்கால போட்டிகளில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் இணைக்க வேண்டாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) கடிதம் எழுதியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒவ்வொரு முறையும் ஒரே குழுவில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இனி அது நடக்கக்கூடாது என்று பிசிசிஐ விரும்புகிறது.
சமீபத்தில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பாகிஸ்தானுக்கு எதிராக எந்த இருதரப்பு தொடரிலும் இந்தியா விளையாடாது என்று உறுதிப்படுத்தினார். இப்போது உலக அரங்கிலும் கிரிக்கெடில் பாகிஸ்தானை இந்தியா தனிமைப்படுத்த விரும்புகிறது. இந்தியாவை பொறுத்தவரை 2029ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நேரடியாக கிரிக்கெட் விளையாடுவதில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட்டை பாகிஸ்தான் நடத்திய நிலையில், இந்தியா அங்கு செல்ல மறுத்தது. அந்த போட்டிகளை இந்தியா இலங்கை சென்று விளையாடியது.
இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் நடத்தியது. இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாமல் புறக்கணித்து தங்களுக்குரிய போட்டிகளை துபாயில் விளையாடி கோப்பையையும் தட்டித்தூக்கியது. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக நடைபெற்ற BCCI உடனான முன் ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் தனது ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே விளையாடும்.
44
India vs Pakistan Clash
BCCI இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆண்கள் ஆசிய கோப்பையை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை நடுநிலையான இடத்தில் நடத்துவதை அதிகாரிகள் முன்பே உறுதிப்படுத்தியுள்ளனர், ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இணைக்கப்படுமா அல்லது தனித்தனியாக இணைக்கப்படுமா என்பதைப் பார்க்க வேண்டும். செப்டம்பர் மாதம் போட்டிக்காக ஒதுக்கப்பட்ட காலக்கெடு. இதற்கிடையில் பிசிசிஐ இன்னும் போட்டி நடைபெறும் இடத்தை அறிவிக்கவில்லை. இப்போதைக்கு இந்தியாவுகும், பாகிஸ்தானுக்கும் இடையில் ICC போட்டிகள் எதுவும் இல்லை. இந்த ஆண்டின் பிற்பகுதியில் மகளிர் ஓடிஐ உலகக் கோப்பை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.