ஆர்சிபி வெளியேற்றிய கோபத்தில் வெறித்தனமாக விளையாடும் முகமது சிராஜ்! புதிய சாதனை!
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது சிராஜ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது சிராஜ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
GT Mohammed Siraj has set a new record: ஐபிஎல்லில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்பு விளையாடிய குஜராத் அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 43 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.
இந்த போட்டியில் 4 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்த முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது வென்றார். ஏற்கெனவே ஆர்சிபிக்கு எதிரான போட்டியிலும் 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்ததி இருந்த சிராஜ் ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிராஜ் பந்துவீச்சி கலக்கி வருகிறார்.
நேற்றைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியதே ஐபிஎல் தொடரில் சிராஜின் சிறந்த பந்துவீச்சாகும். மேலும் ஐபிஎல்லில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 3வது குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர் என்ற சாதனையை சிராஜ் படைத்தார். கடந்த 2023ம் ஆண்டு குஜராத் அணி வீரர் மோஹித் சர்மா 10 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார். இதேபோல் 2023ம் ஆண்டு குஜராத் அணிக்காக விளையாடிய முகமது ஷமி 11 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தி 2வது இடத்தில் இருக்கிறார்.
இனி சிஎஸ்கே குறித்து பேச மாட்டோம்! எதிர்ப்புக்கு பணிந்த அஸ்வின் யூடியூப் சேனல்!
கடந்த 2018ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை என 6 ஆண்டுகள் ஆர்சிபி அணிக்காக விளையாடிய முகமது சிராஜ் பல்வேறு போட்டிகளில் அந்த அணியை வெற்றி பெற வைத்துள்ளார். இந்த நிலையில் ஆர்சிபி அணி கழட்டி விட்டதால் குஜராத் டைட்டன்ஸ் அணி முகமது சிராஜை ரூ.12.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. ஆர்சிபி தன்னை தக்க வைக்காததால் சிராஜ் ஏமாற்றத்தில் இருந்து வந்தார்.
இதனால் இந்த சீசனில் குஜாத் அணிக்காக வெறி கொண்டு சிறப்பாக விளையாடி வரும் சிராஜ், முன்னாள் அணியான ஆர்சிபியை அதன் சொந்த மண்ணில் மிரள வைத்தார். இப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் அசத்தியுள்ளார். சிராஜ் மேலும் பல சாதனை படைக்க வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இப்படி இருந்தா வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது! சேஸிங்கின் போது தூங்கிய சிஎஸ்கே வீரர்!