KKR அணிக்கு பெரும் பின்னடைவு! 150 கிமீ வேகத்தில் பந்துவீசும் பவுலர் திடீர் விலகல்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். 

KKR Umran Malik ruled out of the IPL: உலகின் மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் மார்ச் 22ம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. மார்ச் 22ல் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், :KKR அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் முக்கிய பாஸ்ட் பவுலர் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
 

IPL 2025

அதாவது கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக கேகேஆர் முகாமில் நெட் பவுலராக இருந்த சேதன் சகாரியா கேகேஆர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ''கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) டாடா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் வரவிருக்கும் சீசனுக்கு உம்ரான் மாலிக்கிற்கு மாற்றாக சேதன் சகாரியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. 

ரோகித் சர்மா vs விராட் கோலி! சொத்து மதிப்பில், வருமானத்தில் யார் கிங்? முழு விவ‌ரம்!


Umran Malik ruled out

காயம் காரணமாக உம்ரான் மாலிக் இந்த சீசனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சகாரியா ஒரு ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், மேலும் 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளரான சகாரியா, கேகேஆரில் 75 லட்ச ரூபாய்க்கு இணைகிறார்'' என்று கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025 சீசனில் கொல்கத்தா அணி உம்ரான் மாலிக்கை ரூ.75 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. உம்ரான் மாலிக் மிகவும் திறமையான இந்திய பந்து வீச்சாளர்களில் ஒருவராக உள்ளார். கடந்த சீசனில் அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். இந்த சீசனில் கொல்கத்தா அணி அவரை விலைக்கு வாங்கிய நிலையில், காயம் காரணமாக விளையாட முடியாமல் போய் விட்டது.

Kolkata Knight Riders

உம்ரான் மாலிக் விலகல் கேகேஆர் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாகும். ஏனெனில் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட உம்ரான் மாலிக் தனது வேகத்தின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறன் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணி விரர்கள் பட்டியல்: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர் (துணை கேப்டன்), குயின்டன் டி காக், ரோவ்மன் பவல், ரஹ்மானுல்லா குர்பாஸ், லுவ்னித் சிசோடியா, மணீஷ் பாண்டே, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ராமன்தீப் சிங், ரிங்கு, சிங், ருயூல் அன்ரீல், மொயீன் அலி வைபவ் அரோரா, ஸ்பென்சர் ஜான்சன், மயங்க் மார்கண்டே, அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, வருண் சக்ரவர்த்தி.

ஐபிஎல் மீது முழு வன்மத்தை கொட்டிய பாகிஸ்தான்! தென்னாப்பிரிக்கா வீரருக்கு நோட்டீஸ்!

Latest Videos

click me!