ரோகித் சர்மா vs விராட் கோலி! சொத்து மதிப்பில், வருமானத்தில் யார் கிங்? முழு விவ‌ரம்!

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்புகளாக உள்ளனர். இவர்கள் இருவரில் சொத்து மதிப்பில், வருவாயில் யார் கிங் என விரிவாக பார்ப்போம்.

Rohit Sharma vs Virat Kohli Net Worth: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. ஹிட்மேன் என அழைக்கப்படும் 37 வயதான ரோகித் சர்மா இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பை, அண்மையில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று கொடுத்தவர். இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக இருப்பவர் விராட் கோலி. அண்மையில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபி வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய கோலி இப்போது ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார். இவர்கள் இவரும் விளையாட்டுத் திறனில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. இந்நிலையில், இவர்கள் இருவரில் சொத்து மதிப்பில் யார் கிங் என பார்ப்போம்.

விராட் கோலி சொத்து மதிப்பு

2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.1,100 கோடி ($127 மில்லியன்) என தகவல்கள் கூறுகின்றன. ஒரு மைய ஒப்பந்த வீரராக, கோலி பிசிசிஐயிடமிருந்து ஆண்டுதோறும் ரூ.7 கோடி சம்பாதிக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) உடனான அவரது ஐபிஎல் ஒப்பந்தம் அவருக்கு ஒரு சீசனுக்கு ரூ.15 கோடி வழங்குகிறது. 


விராட் கோலி விளம்பர வருவாய்

விராட் கோலி டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி201க்கு ரூ.3 லட்சம் சம்பளமாக பெறுகிறார். மேலும் பூமா, எம்ஆர்எஃப் மற்றும் ஆடி போன்ற பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்து ரூ.196 கோடி சம்பாதிக்கிறார். அவர் ஒரு விளம்பரத்திற்கு ரூ.7.5-10 கோடி வசூலிக்கிறார். இது மட்டுமின்றி விராட் கோலி  FC கோவா (இந்தியன் சூப்பர் லீக்) மற்றும் ராக்ன் மற்றும் சிசல் போன்ற பிராண்டுகளின் இணை உரிமையாளராக உள்ளார். 

ஏராளமான விலை உயர்ந்த கார்கள் விராட் கோலியின் வசம் உள்ளது. பல கோடிகள் மதிப்பிலான ஆடி R8 V10 பிளஸ், ஆடி R8 LMX, ஆடி A8 L,பென்ட்லி கான்டினென்டல் GT என பல்வேறு விலை உயர்ந்த கார்கள் விராட் கோலியிடம் உள்ளன. விராட் கோலிக்கு சொந்தமாக மும்பையில் ரூ.34 கோடி மதிப்பிலும், குர்கானில் ரூ.80 கோடி மதிப்பிலும் ஆடம்பர வீடுகள் உள்ளன.

ஐபிஎல் மீது முழு வன்மத்தை கொட்டிய பாகிஸ்தான்! தென்னாப்பிரிக்கா வீரருக்கு நோட்டீஸ்!

ரோகித் சர்மா சொத்து மதிப்பு

கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி, ரோகித் சர்மாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.191 கோடி என தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவின் கேப்டனாக ரோகித் பிசிசிஐயிடமிருந்து ஆண்டுதோறும் ரூ.7 கோடியும், மும்பை இந்தியன்ஸுடன் ஐபிஎல் சீசனுக்கு ரூ.16 கோடியும் சம்பாதிக்கிறார். ரோகித் சர்மா அடிடாஸ், ஹப்லாட், சியட் டயர்ஸ், ஸ்விக்கி மற்றும் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் போன்ற முக்கிய பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்கிறார். இந்த விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது.

இது மட்டுமின்றி ரோகித் சர்மா உடற்பயிற்சி, ரியல் எஸ்டேட் மற்றும் பிற வணிகங்களில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளார். ரோகித் சர்மாவிடம் ரூ.12-15 லட்சத்தில் ஸ்கோடா லாரா, ரூ.40 லட்சத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர், ரூ.65 லட்சத்தில் BMW X3ரூ.2.11 கோடியில் ரேஞ்ச் ரோவர் வோக், ரூ. 1.2 கோடியில் மெர்சிடிஸ் GLS 400Dஆகிய விலை உயர்ந்த கார்கள் உள்ளன. ரோகித் சர்மாவுக்குச் மும்பையில் ரூ.30 கோடி மதிப்புள்ள 6,000 சதுர அடி சொகுசு வீடு உள்ளது.

சொத்து மதிப்பில் யார் கிங்?

ரோகித் சர்மாவின் ரூ.191 கோடி சொத்து மதிப்பை ஒப்பிடும்போது விராட் கோலியின் ரூ.1,100 கோடி சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. விளம்பர வருவாயிலும் விராட் கோலி அதிக தூரத்தில் இருக்கிறார். ஆகவே சொத்து மதிப்பில் ரோகித்தை விட விராட் கோலியே கிங் ஆக திகழ்கிறார்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கோப்பையை வெல்லும்! அடித்து சொல்லும் முன்னாள் கேப்டன்!

Latest Videos

click me!