Champions Trophy: IND vs NZ Final: இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ!

Published : Mar 06, 2025, 03:53 PM ISTUpdated : Mar 07, 2025, 06:39 PM IST

சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோத உள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன், லைவ் ஸ்டீரிமிங் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

PREV
14
Champions Trophy: IND vs NZ  Final: இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ!

India  vs New Zealand  ICC champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் வரும் 9ம் தேதி இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வென்று விட்டு இறுதிபோட்டிக்குள் வந்துள்ளது. அதே வேளையில் நியூசிலாந்து அணி இந்தியாவுடன் மட்டும் தோல்வியை தழுவியது. அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை பந்தாடிவிட்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

24
India vs New Zealand ICC champions Trophy 2025

மேட்ச் எங்கே? என்ன நேரத்தில் நடக்கப்போகுது.? 

இந்தியா, நியூசிலாந்து இறுதிப்போட்டி மேட்ச் மார்ச் 9ஆம் தேதி துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில்  மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். டாஸ் 2 மணிக்கு போடப்படும். 

எந்த டிவி, ஓடிடியில் பார்க்கலாம்?

கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரடியாக பார்க்கலாம். ஓடிடியில் ஜியோஹாட்ஸ்டார்ல லைவ் ஸ்ட்ரீமிங் பார்க்கலாம். ஜியோ ஹாட்ஸ்டாரில் பழைய பிளான் ஆக்டிவ்ல இருக்கறவங்க புதுசா சப்ஸ்கிரிப்ஷன் எடுக்க தேவையில்லை. 

IND vs NZ Final : 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து பலப்பரீட்சை!
 

34
IND vs NZ ICC champions Trophy 2025

பிட்ச் எப்படி இருக்கப்போகுது?

போட்டி நடக்கும் 9ம் தேதி துபாயில் நல்ல வெயில் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் வானிலை மேட்ச்சில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. பிட்ச் பேட்டிங்கு சாதகமா இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனா நேரம் போகப்போக ஸ்பின்னர்களுக்கு சாதகமா மாற வாய்ப்பு இருக்கு. ஆனாலும் இரண்டாவது பேட்டிங் பண்ணும் அணிக்கு ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கிரிக்கெட் நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்தியா இந்த தொடரில் 3 முறை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளது.

இந்திய அணியில் மாற்றமா?

இந்திய அணியை பொறுத்தவரை அணியில் எந்த மாற்றமும் இருக்காது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் விளையாடிய வீரர்கள் அப்படியே தொடருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி வழக்கம்போல் வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா என 4 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி விளையாட உள்ளது. 

44
Indian Team Playing 11

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: 

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், மற்றும் முகமது ஷமி.

நியூசிலாந்து அணி உத்தேச பிளேயிங் லெவன்: 

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), வில் யங், டேரில் மிட்ச்செல், கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓ'ரூர்க்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் 4ஆவது சதம் – SAவை ஓட ஓட விரட்டிய கேன் வில்லியம்சன் சதம் விளாசி சாதனை!

click me!

Recommended Stories