National Sports Awards 2023: அர்ஜூனா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

First Published | Jan 9, 2024, 12:44 PM IST

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

Mohammed Shami Arjuna Awards 2023

ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Arjuna Awards Winners List

அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கான வீரர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.

Tap to resize

List Of Arjuna Awards

இதில் உலகக் கோப்பையில் சிறந்து விளங்கிய முகமது ஷமி, செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலி, ஹாக்கியில் சிறந்து விளங்கிய கிரிஷன் பகதூர் பதக், புக்ரம்பம் சுசீலா சானு ஆகியோர் உள்பட 26 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது.

Arjuna Awards 2023

இதே போன்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சார்யா விருதும், தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டது.

Arjuna Award Winners List

இந்த நிலையில் தான் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்பு கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறார். அந்த வகையில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

Arjuna Awards 2023

இதே போன்று செஸ் கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், வில்வித்தை, ஹாக்கி, தடகளம், செஸ், பேட்மிண்டன், குதிரையேற்றம், கோல்ஃப், கபடி, ஸ்குவாஸ், டேபிள் டென்னிஸ், பாரா கேனோயிங் என்று பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!