Ashwin and Prithi Narayanan
அஸ்வின் திடீர் ஓய்வு
இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில், தொடரின் பாதியிலேயே அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் 2 போட்டிகளில் விளையாட மறுக்கப்பட்டதாலேயே அஸ்வின் ஓய்வு பெற்றதாகவும், பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா ஓரம்கட்டியதாகவும் ஒருபக்கம் தகவல்கள் கூறுகின்றன.
Ashwin Family
அஸ்வினின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பின்பு ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வின், ''இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தான் ஓய்வு பெற்றுள்ளார். எனக்குள் இருக்கும் கிரிக்கெட் வீரர் இன்னும் ஓய்வு பெறவில்லை. என்னால் முடிந்தவரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்காக விளையாட போகிறேன். மேலும் விளையாடமல் சும்மா இருப்பது மிகவும் கடினம்''என்று கூறியிருந்தார்.
'டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பதில்லை'; கோலி, கில் மீது வெளிப்படையாக குற்றம்சாட்டிய ஜடேஜா!
Ashwin Batting
அஸ்வின் மனைவி உருக்கம்
இந்நிலையில், அஸ்வினின் ஓய்வு குறித்து அவரது மனைவி பிரீத்தி நாராயணன் உருக்கமாக கூறியுள்ளார். இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட அவர், ''கடந்த இரண்டு நாட்களாக நான் என்ன சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.எனது ஆல் டைம் ஃபேவரிட் கிரிக்கெட் வீரருக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த பதிவை போடுகிறேனா?
ஒருவேளை நான் அஸ்வினின் பார்ட்னர் என்ற கோணத்தை மட்டும் எடுத்துக் கொள்வேனா? அல்லது ஒரு கிரிக்கெட் வீரருக்கு ரசிகப் பெண்ணின் காதல் கடிதமா? என்று தெரியவில்லை. ஆனால் இது எல்லாவற்றிலும் கலந்தது என்று நினைக்கிறேன்.
Ashwin Retirement
குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்
உலகம் முழுவதும் அனைத்து மைதானங்களுக்கும் உங்களுடன் வந்துள்ளேன். உங்களுக்காக எங்கும் நின்றுள்ளேன். நீங்கள் விளையாடுவதை அருகில் இருந்தது பார்த்தது பாக்கியம். உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். நீங்கள் எனக்கு அறிமுகம் செய்துவைத்த உலகம் தான், நான் சிறுவயதில் இருந்தே விரும்பிய விளையாட்டை என்னை மிக அருகில் இருந்து பார்க்கவைத்தது.
உங்களது சுமையை இறக்கி வைப்பதற்கான நேரம் இதுதான். உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். நாள் முழுவதும் மீம்ஸ்களை அனுப்புங்கள். எதுவுமே செய்யாமல் சும்மா இருக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள்'' என்று தெரிவித்துள்ளார். அஸ்வின் மனைவியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெல்போர்னில் சச்சினின் சாதனையை முறியடிக்கும் கோலி? சரித்திரம் படைப்பாரா?