Anaya Bangar accused cricketers of sending her nude pictures: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர். இவரது மகன் 23 வயதான ஆர்யன் பங்கர். தந்தையை போன்று கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட இவர் உள்ளூர் கிளப் கிரிக்கெட்டில் இஸ்லாம் ஜிம்கானாவுக்காக விளையாடியுள்ளார். இடது கை பேட்ஸ்மேனான ஆர்யன் பங்கர் லீசெஸ்டர்ஷையரில் உள்ள ஹின்க்லி கிரிக்கெட் கிளப்பிற்காகவும் விளையாடி இருக்கிறார். இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆர்யன் பங்கர் தான் பெண்ணாக மாற வேண்டி விருப்பம் தெரிவித்து பாலின மாற்றச் சிகிச்சை மேற்கொள்வதாக அறிவித்து இருந்தார்.
24
Anaya Bangar, Cricket
இதனைத் தொடர்ந்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் தனது பெயரை அனன்யா பங்கர் என மாற்றிக் கொண்டார். இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் செய்தி வெளியிட்ட அவர், ''சிறு வயது முதலே தந்தையின் வழியை பின்பறி அவரை போன்று பெரிய வீரராக உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தந்தையை போன்று நாட்டுக்காக விளையாட வேண்டும் என திறமையை வளர்த்துக் கொண்டேன். ஆனால் நான் ஹார்மோன் மாற்று சிகிச்சை செய்து கொண்டபிறகு எனது தசை வலிமை, நினைவாற்றல், விளையாடும் திறன் குறைந்து விட்டது'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சில கிரிக்கெட் வீரர்கள் தனக்கு நிர்வாண படங்கள் அனுப்பியதாக அனன்யா பங்கர் பகீர் குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். தி லாலன்டாப் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் சில கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்பினர் என்று கூறியதுடன் ஒரு நபர் எல்லோர் முன்னிலையிலும் தன்னைத் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டினார். "அப்போது அதே நபர் என் அருகில் வந்து அமர்ந்து என் புகைப்படங்களைக் கேட்பார்" என்றும் அனன்யா பங்கர் தெரிவித்துள்ளார்.
பெரிய போட்டிகளில் விளையாடியவர்கள் கூட தனக்கு நிர்வாண புகைப்படங்கள் அனுப்பியதாக கூறியுள்ள அனன்யா பங்கர், அவர்களின் ஆசைக்கு நான் உடன்படுவேன் என எதிர்பார்த்தனர். நான் என்னை பாதுகாத்துக் கொள்ள விரும்பினேன் என்று கூறியுள்ளார். அதே வேளையில் தனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய வீரர்கள் யார்? என்பதை அனன்யா பங்கர் கூற மறுத்து விட்டார்.
44
Anaya Bangar, India
''அப்பா ஒரு பிரபலமான நபர் என்பதால் நான் என்னைப் பற்றி ரகசியமாக வைத்திருக்க வேண்டியிருந்தது. கிரிக்கெட் உலகம் பாதுகாப்பின்மை மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மையால் நிரம்பியுள்ளது. எனது அடையாளத்திற்காக நான் மனரீதியான சித்ரவதையை மட்டுமல்ல, பாலியல் துன்புறுத்தலையும் எதிர்கொண்டேன்'' என்ற பகீர் தகவலையும் அனன்யா பங்கர் கூறியுள்ளார். திருநங்கை விளையாட்டு வீரர்கள் பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க தடை விதிக்கும் ஐ.சி.சியின் புதிய விதி குறித்தும் அனயா பங்கர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
அனன்யா பங்கரின் இந்த பகீர் குற்றச்சாட்டுகள் இப்போது கிரிக்கெட் உலகில் பேசும்பொருளாகியுள்ளது. ''அனன்யா பங்கர் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளானது உண்மையா? இது உண்மையெனும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என கிரிக்கெட் ரசிகரக்ள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.