நான் அன்றும் இன்றும் என்றும் தோனி ரசிகன்! ட்ரோல் செய்தவர்களுக்கு அம்பத்தி ராயுடு பதிலடி!

Published : Apr 10, 2025, 05:13 PM IST

தான் எப்போதும் தல தோனி ரசிகன் தான் என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.  தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.  

PREV
14
நான் அன்றும் இன்றும் என்றும் தோனி ரசிகன்! ட்ரோல் செய்தவர்களுக்கு அம்பத்தி ராயுடு பதிலடி!

 Ambati Rayudu talks about Dhoni: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் படுமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டியில் விளையாடியுள்ள சிஎஸ்கே தொடர்ந்து 4 தோல்வி அடைந்து ஒரே ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று 9வது இடத்தில் உள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியனஸ் உடன் போராடி வெற்றி பெற்ற சிஎஸ்கே, அதனைத் தொடர்ந்து விளையாடிய மற்ற போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.

24
Ambati Rayudu, MS Dhoni

சிஎஸ்கேவின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றும் மோசமாக இருக்கிறது. இது தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ராஜஸ்தானுக்கு எதிராக அவரது பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேத்யூ ஹைடன் உள்பட சிஎஸ்கே முன்னாள் வீரர்கள் பலர் தோனி ஓய்வு பெற வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதே வேளையில் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தோனிக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். 'இந்த வயதில் இப்படி அதிரடியாக விளையாட யாராலும் முடியாது' என்று அவர் கூறி வந்தார். 

இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை நீக்கிய விராட் கோலி! கடைசியில் வந்த 'ஸ்வீட்' ட்விஸ்ட்!

34
CSK, MS Dhoni

இதற்கு ரசிகர்கள் அம்பத்தி ராயுடுவை ட்ரோல் செய்து வந்தனர். ''தோனியால் முன்பை போல் அணிக்கு வெற்றி தேடி கொடுக்க முடியவில்லை. வயதாகி விட்டதால் அவரது பேட்டிங் திறன் குறைந்து விட்டது என்பது தான் உண்மை. ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாமல் அம்பத்தி ராயுடு தோனிக்கு மீண்டும் மீண்டும் முட்டு கொடுப்பது ஏன்'' என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்தனர்.இந்நிலையில், ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த அம்பத்தி ராயுடு தான் எப்போதும் தோனி ரசிகர் தான் என்று தெரிவித்துள்ளார். 

44
IPL, Sports News

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''நான் தோனி ரசிகராக இருந்தேன். தோனி ரசிகராக இருக்கிறேன். இனி எப்போதும் தோனி ரசிகராகவே இருப்பேன். யார் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அது ஒரு சதவீதம் வித்தியாசம் கூட ஏற்படுத்தாது. எனவே தயவுசெய்து பணம் செலுத்திய பிஆர்‍.களுக்கு பணத்தை செலவிடுவதை நிறுத்திவிட்டு, அதை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குங்கள். இதனால் நிறைய ஏழை மக்கள் பயனடையலாம்'' என்று கூறியுள்ளார். 

CSK vs KKR: உங்க சேவை போதும்! முக்கிய ஃபாஸ்ட் பவுலரை நீக்கிய சிஎஸ்கே! பிளேயிங் லெவன்!
 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories