2011 உலகக் கோப்பை வெற்றியாளர் யுவராஜ், தோனியின் தலைமையில் பல ஆண்டுகள் விளையாடியதாகக் கூறினார். தோனி ஒரு சிறந்த கேப்டன் என்று குறிப்பிட்டார். ஆனால், வங்காளப் புலி, தாதா என்று செல்லமாக அழைக்கப்படும் கங்குலியைத் தனது முதல் கேப்டனாகத் தேர்ந்தெடுப்பதாக யுவி கூறினார்.
யுவராஜ் மேலும் பேசுகையில், 'அவர்கள் அனைவரும் கேப்டன்களாக இருந்தனர். தோனி, கங்குலி தலைமையில் நீண்ட காலம் விளையாடினேன். கங்குலியின் தலைமையில் எனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினேன், அதனால்தான் எனது முதல் கேப்டன், சிறந்த கேப்டன் சவுரவ் கங்குலி' என்றார்.
இந்திய அண்டர்-19 உலகக் கோப்பை வெற்றியில் யுவராஜ் சிங் தொடரின் வீரராக (POTM) தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்தார். 2000 ஐசிசி நாக் அவுட் டிராபிக்கு (பின்னர் சாம்பியன்ஸ் டிராபி என மறுபெயரிடப்பட்டது) இந்திய அணியில் யுவராஜ் இடம் பிடித்தார்.