வேறு வழியில்லாமல், அவரது இளஞ்சிவப்பு செருப்பை அணிந்து கொண்டு இந்திய அணி பேருந்தில் ஏறினேன். காதலியின் செருப்பு என்று தெரியாமல் கிரிக்கெட் வீரர்கள் தேடி கைதட்டி ஆர்ப்பரித்தனர். விமான நிலையம் வரை இந்த செருப்பைத்தான் அணிந்திருந்தேன். பிறகு விமான நிலையத்தில் வேறு செருப்பு வாங்கினேன் என்று யுவராஜ் சிங் கூறினார். ஆனால் டேட்டிங் செய்த நடிகையின் பெயரைச் சொல்ல யுவராஜ் சிங் மறுத்துவிட்டார்.
2000 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி பல சாதனைகளை படைத்தவர் யுவராஜ் சிங். 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,701 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 111 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதே போன்று 58 டி20 போட்டிகளில் விளையாடி 1,177 ரன்கள் எடுத்தார். மேலும், 29 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.
40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,900 ரன்கள் எடுத்ததோடு, 10 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்திற்கு எதிராக யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி புதிய சாதனை படைத்தார். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி 6 சிக்ஸர்கள் விளாசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.