Yashasvi Jaiswal
இந்தியா வந்த இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்று விளையாடியவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இதில், 5 போட்டிகளில் 80, 15, 209, 17, 10, 214, 73, 37,57 என்று மொத்தமாக 712 ரன்கள் குவித்தார்.
Yashasvi Jaiswal, IPL 2024, Rajasthan Royals
இதில், 2 இரட்டை சதம், 3 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியதைத் தொடர்ந்து நேரடியாக டி20 பார்மேட்டான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
Yashasvi Jaiswal, T20 World Cup 2024
ஆனால், இதுவரையில் இன்றைய போட்டி உள்பட ராஜஸ்தான்ர் ராயல்ஸ் 5 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த சீசனில் அதிரடிக்கு பெயர் போன யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24, 5, 10, 0, 24 என்று மொத்தமாக 63 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறார்.
Yashasvi Jaiswal, RR
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழாவைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி இந்த மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் தொடக்கத்திலோ அறிவிக்கப்பட இருக்கிறது.
RR vs GT Live Score
டி2ப் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டுமானால் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும். ஆனால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதே ஃபார்மில் விளையாடி வந்தால் இந்த தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நீக்கப்படுவதோடு, இந்திய அணியிலும் இடம் பெற மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Rajasthan Royals
ஏற்கனவே இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஷுபம் துபே, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் ஆகியோர் வரிசை கட்டி நிற்கும் போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
RR vs GT Live Score, 24th IPL Match
இதுவரையில் 5 போட்டிகள் மட்டுமே முடிந்த நிலையில் இன்னும் 9 போட்டிகள் இருக்கிறது. இதுவரையில் சரியாக விளையாடாவிட்டாலும் இனி வரும் போட்டிகளில் ஜெய்ஸ்வால் டி20 போட்டிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு விளையாடினால் மட்டுமே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.