முதல் முறையாக மழை குறுக்கீடு - டாஸ் போடுவதில் சிக்கல், RR vs GT போட்டி நடைபெறுமா?

First Published | Apr 10, 2024, 7:14 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 24ஆவது லீக் போட்டியின் போது மழை பெய்து வரும் நிலையில் டாஸ் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

RR vs GT Toss Delay due to Rain

ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ராஜஸ்தானின் ஹோம் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் டாஸ் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த சீசனில் மழை குறுக்கீடு ஏற்பட்டுள்ளது.

Gujarat Titans

இதுவரையில் ராஜஸ்தான் ஹோம் மைதானத்தில் மோதிய 3 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. இது 4ஆவது போட்டி என்பதால், இந்தப் போட்டியிலும் ராஜஸ்தான் வெற்றி பெறுவதற்கு 50 சதவிகித வாய்ப்புகள் உள்ளது. இதற்கு காரணம் இரு அணிகளும் மோதிய 5 போட்டிகளில் 4ல் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

Tap to resize

Rain in RR vs GT 24th IPL Match

இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளது. மேலும் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தியது. மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்தியது.

Rajasthan Royal vs Gujarat Titans

இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுவும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தனது சொந்த மண்ணில் வீழ்த்தியது. மேலும், சொந்த மண்ணில் ஒரு போட்டியில் தோல்வியை தழுவியது. அதோடு அவே மைதானத்தில் நடந்த 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

RR vs GT 24th IPL Match, Rain

இன்றும் அதே போன்று அவே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறுவதற்கு 50 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் பவுலிங் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும், பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. பவுலிங்கில் நூர் அகமது, ரஷீத் கான், மோகித் சர்மா, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், தர்சன் நீல்கண்டே ஆகியோர் சிறப்பாக பவுலிங் செய்து வருகின்றனர்.

Jaipur, RR vs GT, Rain

ஆனால், பேட்டிங்கில் சாய் சுதர்சன், கேன் வில்லியம்சன், ராகுல் திவேதியா, விஜய் சங்கர் ஆகியோர் தடுமாறுகின்றனர். இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தடுமாறி வருகிறார். அந்த அணி பவுலிங் மற்றும் பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. ஆதலால், புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.

Latest Videos

click me!