50ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடி முக்கியமான விக்கெட்டை எடுத்த நடராஜனுக்கு குவியும் வாழ்த்து!

First Published Apr 10, 2024, 11:44 AM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 23ஆவது ஐபிஎல் போட்டியின் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் யார்க்கர் மன்னன் நடராஜன் தனது 50ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடி ஒரு விக்கெட் எடுத்துக் கொடுத்தார்.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 23 ஆவது லீக் போட்டி முல்லன்பூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்தார்.

Sunrisers Hyderabad, IPL 2024

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிதிஷ் ரெட்டியின் அதிரடியால் 182 ரன்கள் குவித்தது. இதில், நிதிஷ் ரெட்டி, 37 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸ் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Punjab Kings vs Sunrisers Hyderabad

இதையடுத்து 183 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்தது. இதில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மிடில் ஆர்டரில் சாம் கரண் களமிறங்கி அதிரடி காட்டினார். அப்போது தனது 50ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய நடராஜன் பந்து வீச வந்தார். 10ஆவது ஓவரின் முதல் பந்திலேயே சாம் கரண் விக்கெட்டை கைப்பற்றினார்.

Nitish Reddy

முதல் ஓவரில் 7 ரன்கள் கொடுத்த நடராஜன், தனது 2ஆவது ஓவரில் 8 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். 3ஆவது ஓவரிலும் 8 ரன்கள் கொடுத்த நிலையில் 19ஆவது ஓவர் வீச வந்தார். அந்த ஓவரில், 2 பவுண்டரி உள்பட 10 ரன்கள் மட்டுமே கொடுத்து தனது 50ஆவது போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். முக்கியமான கட்டத்தில் அணிக்கு ஒரு விக்கெட் எடுத்துக் கொடுத்த நடராஜனுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

PBKS vs SRH, 23rd IPL Match

எனினும் கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் 26 ரன்கள் எடுக்க 2 ரன்களில் தோல்வியை தழுவியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் செய்த போது கடைசி பந்தில் சிக்ஸ் அடித்துக் கொடுத்தவர் ஜெயதேவ் உனத்கட் தான். அவர் சிக்ஸ் அடித்ததன் காரணமாக சன்ரைசர்ஸ் 182 ரன்கள் குவித்தது.

Natarajan, SRH

அந்த 6 ரன்கள் தான் ஹைதராபாத் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்தப் போட்டியில் ரன்கள் கொடுத்திருந்தாலும் நோபால் கொடுக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெயதேவ் உனத்கட்டிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

T Natarajan 50th IPL Match 2024

கடைசியில் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து 2 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 3 தோல்வி, 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.

click me!