ரன்னு கொடுத்தாலும் நோபால் போடல; தப்பித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஜெயதேவ் உனத்கட்டுக்கு குவியும் பாராட்டு!

First Published | Apr 10, 2024, 10:39 AM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 23ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்தவர் ஜெயதேவ் உனத்கட்.

Sunrisers Hyderabad

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 23 ஆவது லீக் போட்டி முல்லன்பூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்தார்.

Shashank Singh, PBKS

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிதிஷ் ரெட்டியின் அதிரடியால் 182 ரன்கள் குவித்தது. இதில், நிதிஷ் ரெட்டி, 37 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸ் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 183 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்தது.

Tap to resize

PBKS vs SRH, 23rd IPL Match

இதில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசியில் இணைந்த ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். கடைசியில் பஞ்சாப் கிங்ஸை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். கடைசி ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் பஞ்சாப் வெற்றி என்ற நிலை இருந்தது.

Sunrisers Hyderabad

கடைசி ஓவரை ஜெயதேவ் உனத்கட் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் அஷூதோஷ் சர்மா 6 சிக்ஸ் அடித்தார். அதனை தடுக்க முயன்ற நிதிஷ் ரெட்டி கேட்ச் பிடித்து கோட்டைவிட பந்து சிக்ஸருக்கு சென்றது.

Jaydev Unadkat

அடுத்த 2 பந்தையும் வைடாக வீசினார். 2 ஆவது பந்தையும் சிக்ஸருக்கு விரட்டினார். அப்துல் சமாத் பந்தை ஜம்ப் பண்ணி கேட்ச் பிடிக்க முயற்சித்தார். எனினும், பந்து சிக்ஸருக்கு சென்றது. அடுத்த 2 பந்துகளில் 2, 2 என்று 4 ரன்கள் எடுக்கப்பட்டது.

PBKS vs SRH, Nitish Reddy

5ஆவது பந்தில் கொடுக்கப்பட்ட கேட்ச் வாய்ப்பை ராகுல் திரிபாதி கோட்டைவிட்டார். அந்த பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் பஞ்சாப் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தில் நோபால் போட்டிருந்தால் எப்படியும் பஞ்சாப் வெற்றி பெற்றிருக்கும்.

Punjab Kings vs Sunrisers Hyderabad

எனினும் அந்த பந்தில் ஷஷாங்க் சிங் சிக்ஸர் அடித்தார். ஆரம்பத்தில் 2 வைடு வீசிய ஜெயதேவ் உனத்கட் அந்த ஓவரில் ஒரு நோபால் வீசவில்லை. பதற்றம், அழுத்தம் நிறைந்த ஓவரை சிறப்பாக வீசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

PBKS vs SRH

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் செய்த போது கடைசி பந்தில் சிக்ஸ் அடித்துக் கொடுத்தவர் ஜெயதேவ் உனத்கட் தான். அவர் சிக்ஸ் அடித்ததன் காரணமாக சன்ரைசர்ஸ் 182 ரன்கள் குவித்தது.

Sunrisers Hyderabad

அந்த 6 ரன்கள் தான் ஹைதராபாத் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்தப் போட்டியில் ரன்கள் கொடுத்திருந்தாலும் நோபால் கொடுக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெயதேவ் உனத்கட்டிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

PBKS vs SRH

கடைசியில் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து 2 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 3 தோல்வி, 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.

Latest Videos

click me!