T20 World Cup 2026: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த தவறுகளையும், இந்தியா அரையிறுதி செல்ல வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்தும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் தவிர மற்றவர்கள் சொதப்பியதும், பேட்டிங்கில் ஒட்டுமொத்த யூனிட்டும் சொதப்பியதுமே தோல்விக்கு முதன்மை காரணமாகும். மிக முக்கியமான இந்த போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவும் (SKY) 3 முக்கிய தவறுகள் செய்தார். அது குறித்து பார்க்கலாம்.
25
அக்சர் படேல் எங்கே?
இந்திய அணியின் ஆல்ரவுண்டராகவும், துணை கேப்டனாகவும் இருந்து வரும் அக்சர் படேலை நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிளேயிங் லெவனில் சேர்க்காதது மிகப்பெரும் தவறாகும். வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஓவரை தென்னாப்பிரிக்கா வீரர்கள் நேற்று பொளந்து கட்டினார்கள். அக்சர் மட்டும் இருந்திருந்தால் மிடில் ஓவர்களில் கண்டிப்பாக ஒரு விக்கெட்டாவது வீழ்த்தி இருப்பார்.
பேட்டிங்கில் சில ரன்களை சேர்த்திருப்பார். இதை நாம் பல போட்டிகளில் பார்த்திருக்கிறோம். அக்சருக்கு பதிலாக இடம்பெற்ற வாஷிங்டன் பேட்டிங்கில் சொதப்பினார். பவுலிங்கிலும் எதிர்பார்த்த இம்பேக்ட் இல்லை. காயத்தில் இருந்து வந்த வாஷிங்டனை சேர்த்து விட்டு, அக்சரை கழட்டி விட்டது ஏன்? என புரியாத புதிராக உள்ளது.
35
பேட்டிங் லைனில் மாற்றம்
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் அதிரடி வீரர் ஹர்திக் பாண்ட்யா 5வது இடத்தில் தான் இறங்கி வருகிறார். சில போட்டிகளில் அதிரடியாகவும் ஆடி கொடுத்துள்ளார். இப்படி இருக்கும்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் 7வது இடத்தில் களமிறக்கப்பட்டார்.
அவரது இடத்தில் ஷிவம் துபே களமிறக்கப்பட்டார். இந்த மாற்றத்தால் இருவருமே சொதப்பினார்கள். ஹர்திக் வழக்கம்போல் தனது இடத்தில் ஆடியிருந்தால் கொஞ்ச நேரம் நிதானமாக இருந்து பெரிய ஷாட்களை ஆட வாய்ப்பு இருந்திருக்கும்.
நடப்பு டி20 உலகக்கோப்பையில் அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக ஹாட்ரிக் டக் அவுட் ஆன அபிஷேக் சர்மாவுக்கு நேற்று சான்ஸ் கொடுத்ததும் ஒரு தவறாகும். அவர் தனது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டார்.
அபிஷேக்குக்கு பதிலாக சஞ்சுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். இதேபோல் ரிங்கு சிங்கும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ்வை கூட விளையாட வைத்திருந்தால் அவர் சில விக்கெட்டுகளை எடுத்து எதிரணியை நெருக்கடிக்கு தள்ளியிருப்பார்.
55
இந்தியாவுக்கு செமி பைனல் சான்ஸ் இருக்கா?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான படுதோல்வி இந்திய அணியின் செமி பைனல் பாதையையும் கடினமாக்கி இருக்கிறது. இந்திய அணி இப்போது -3.800 என்ற மைனஸ் ரன்ரேட்டில் படுமோசமாக உள்ளது. இந்தியா அரையிறுதி செல்ல மீதமுள்ள ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் ரன்ரேட்டை பிளஸ்க்கு கொண்டு வர முடியும்.
தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தினால் இந்தியா மீதமுள்ள இரண்டு போட்டிகளில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் போதுமானது. ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் அல்லது ஜிம்பாப்வே அணிகள் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால், மூன்று அணிகள் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன் ரேட் அதிகமாக இருக்கும் அணிகளே அரையிறுதிக்குத் தகுதி பெறும். இது இந்தியவுக்கு சவலாக இருக்கும்.