ராச்யல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்றைய 36ஆவது போட்டியில் மோதுகின்றன. பெங்களூரு மைதானத்தில் நடக்கும் கடைசி போட்டி இது தான்.
புள்ளிப்பட்டியல்
அதன் பிறகு ஆர்சிபி அணி 70ஆவது போட்டியில் பெங்களூருவில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அது வரையிலும் ஆர்சிபி அணி வெளி மைதானங்களில் நடக்கும் போட்டிகளில் விளையாடுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஒவ்வொரு அணியும் ஏழேழு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனின் ஃபர்ஸ்ட் ஆஃப் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
ஆர்சிபி
குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது.
அதிக சிக்ஸர்கள் பாப் டூப்ளெசிஸ் (25)
மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 4ஆவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் இடம் பெற்றுள்ளன. 5ஆவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 8ஆவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இடம் பெற்றுள்ளன.
12 அரைசதங்கள்
இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் ஆர்சிபி அணி மகுடம் சூடினால், புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களில் ஒரு அணியாக இடம் பெறும் வாய்ப்பு உண்டு. பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில் பாப் டூப்ளெசிஸ், விராட் கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.
பாப் டூப்ளெசிஸ்
இதுவரையில், பாப் டூப்ளெசிஸ் 5 முறையும், விராட் கோலி 4 முறையும், மேக்ஸ்வெல் 3 முறையும் இந்த சீசனில் அரைசதம் அடித்து அதிக அரைசதங்கள் அடித்த அணிகளின் பட்டியலில் ஆர்சிபி முதலிடம் பிடித்துள்ளது.
கிளென் மேக்ஸ்வெல்
அதுமட்டுமின்றி அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் பாப் டூப்ளெசிஸ் 405 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவ்வளவு ஏன் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் கூட பாப் டூப்ளெசிஸ் தான் (25 சிக்ஸர்கள்) முதலிடம் பிடித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இதே போன்று பந்து வீச்சில் முகமது சிராஜ் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். அவருக்கு பக்கபலமாக ஹர்ஷல் படேல் இருக்கிறார். கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிய பெங்களூரு ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.
ஆர்சிபி
இதுவரையில் விளையாடிய 31 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 போட்டிகளில் வெற்றி பெற்று, 14 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. எனினும், கடைசி 6 ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணி 4ல் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச ஆடும் 11:
விராட் கோலி (கேப்டன்), பாப் டூப்ளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அஹமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் ப்ரபுதேசாய், டேவிட் வில்லி, வாணிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.
இம்பேக்ட் பிளேயர் - வைஷாக் விஜயகுமார்.