ரூ.23 கோடிக்கு தக்க வைக்கப்படும் வீரர் யார்? ஹைதராபாத்தில் தக்க வைக்கப்படும் டாப் 5 வீரர்களின் பட்டியல்!

First Published | Oct 23, 2024, 12:26 PM IST

IPL 2025: SRH Retained Players: ஐபிஎல் 2025 தொடருக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தக்கவைப்பு வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹென்ரிச் கிளாசென், பேட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தக்கவைக்கப்பட உள்ளனர்.

IPL 2025 Retention SRH

IPL 2025: SRH Retained Playersஐபிஎல் 2025 தொடருக்கான தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கனான கடைசி தேதி நெருங்கி வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் யாரை வச்சுக்கலாம், யாரை விடுவிக்கலாம் என்பதில் தீவிர ஆலோசனையில் உள்ளது. கடந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை வந்து தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்த முறை பல சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஏலத்தில் நடக்கும், தக்க வைக்கப்படும் வீரர்களின் சம்பளத்திலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SRH Retained Players

ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் முக்கியமான 3 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவர்களைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் முதலில் இருப்பது ஹென்ரிச் கிளாசென்.

அதிரடி ஆக்‌ஷனுக்கு பெயர் போன கிளாசென் ரூ.23 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய கிளாசென் 479 ரன்கள் குவித்தார். மேலும், இந்த அணியில் 2ஆவது அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Tap to resize

Heinrich Klassen, IPL 2025 Auction

ஹென்ரிச் கிளாசென் உடன் இணைந்து ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தக்க வைக்கப்பட்டவர்களின் பட்டியலில் 2ஆவதாக இடம் பெற்றுள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் அணியை சிறப்பாக வழிநடத்தி சென்ற பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக ரூ.20.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.

இந்த முறை அவர் ரூ.18 கோடிக்கு தக்க வைக்கப்படலாம் என்று தெரிகிறது. இவர்களது வரிசையில் அடுத்ததாக இடம் பெற்றிருப்பவர் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 204.21 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அபிஷேக் சர்மா 484 ரன்கள் குவித்தார். இந்த முறை அவர் ரூ.14 கோடிக்கு தக்க வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Pat Cummins, SRH Retained Players

ஹைதராபாத் அணியில் மற்றொரு அதிடடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டை எத்தனை கோடிக்கு தக்க வைக்கலாம் என்ற குழப்பத்தில் அணி நிர்வாகம் இருக்கிறது. இதே போன்று மற்றொரு வீரர் நிதிஷ் குமார் ரெட்டிக்கும் எவ்வளவு தொகை கொடுக்கலாம் என்ற ஆலோசனையில் ஹைதராபாத் இருக்கிறது. விரைவில் இருவருக்கும் தக்க வைப்பு தொகை குறித்து விவரங்களை ஹைதராபாத் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள்:

ஹென்ரிச் கிளாசென்

பேட் கம்மின்ஸ்

அபிஷேக் சர்மா

டிராவிஸ் ஹெட்

நிதிஷ் குமார் ரெட்டி

SRH, IPL 2025 Mega Auction

கடந்த 2024 ஆம் ஆண்டை விர 2025 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சிறந்த ஐபிஎல் அணியாக பல சாதனைகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகவே வலிமை மிக்க வீரர்களை அணி நிர்வாகம் ஏலத்தில் எடுக்கும்.

2025 ஆம் ஆண்டிற்கான ஏல பர்ஸ் தொகை 120 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கேப் செய்யப்பட்ட வீரர்களுக்கு ரூ. 18 கோடி, ரூ. 14 கோடி மற்றும் ரூ. 11 கோடி எனத் தக்க வைத்துக் கொள்ளலாம். கடைசி 2 வீரர்களுக்கு ரூ. 18 கோடி மற்றும் ரூ. 14 கோடிக்கு பாதுகாக்கலாம். அன் கேப்டு இந்திய வீரர்கள் அதிகபட்சமாக 4 கோடி ரூபாய் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!