MI இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமா? குவாலிஃபையர் 2ல் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?

Published : Jun 01, 2025, 06:05 AM IST

IPL 2025 Qualifier 2 PBKS vs MI : குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறுவார்களா? வரலாற்றுப் பதிவுகள் என்ன சொல்கின்றன? என்பதை பார்க்கலாம்.

PREV
16
மும்பை குவாலிஃபையர் 2 போட்டியில் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?

IPL 2025 Qualifier 2 PBKS vs MI : ஐபிஎல் 2025 தொடரின் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்ள வேண்டும். மும்பை குவாலிஃபையர் 2 போட்டியில் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறுவார்கள் என்ற ஒரு சுவாரஸ்யமான கணிப்பு உள்ளது. வரலாற்றுப் பதிவுகள் இதற்குச் சான்றாக உள்ளன. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
மும்பையின் குவாலிஃபையர் 2 பயணம்

5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ், 4 முறை குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டி வெற்றி பெற்றால் இறுதிப் போட்டி, தோல்வி அடைந்தால் வெளியேற்றம் என்ற நிலையில் இருக்கும்.

36
குவாலிஃபையர் 2ல் மும்பையின் வெற்றிப் பாதை

4 குவாலிஃபையர் 2 போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. மேலும், அந்த இரண்டு முறையும் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று சாதனையின் படி பார்க்கையில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் இறுதியிப் போட்டியிலும் வெற்றி பெற கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

46
குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப் போட்டியில் மும்பையின் வெற்றிப் பாதை:

2013 –

குவாலிஃபையர் 2ல் வெற்றி பெற்ற மும்பை, இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.

முடிவு: மும்பை – சாம்பியன்!

2017 –

குவாலிஃபையர் 2ல் மீண்டும் வெற்றி பெற்ற மும்பை, இறுதிப் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

முடிவு: மும்பை – சாம்பியன்!

56
வரலாறு என்ன சொல்கிறது?

மும்பை இந்தியன்ஸ் குவாலிஃபையர் 2ல் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை வரலாறு காட்டுகிறது. 50% வெற்றி விகிதம், இறுதிப் போட்டியில் 100% வெற்றியாக மாறியுள்ளது!

66
இந்த ஆண்டும் வரலாறு மீண்டும் நிகழுமா?

தற்போது மும்பை அணி சிறப்பான ஃபார்மில் உள்ளது. குவாலிஃபையர் 2 வரலாறும் அவர்களுக்குச் சாதகமாக உள்ளது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டி விறுவிறுப்பாக இருக்கும். மும்பை இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகும்.

மும்பை இந்தியன்ஸுக்கு குவாலிஃபையர் 2 என்பது சாம்பியன் பட்டத்துக்கான முதல் படி! உங்கள் கருத்து என்ன? 2025ல் மும்பை மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லுமா?

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories