
Virat Kohli Test Cricket Record India vs Australia : ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. ரோகித் சர்மா இடம் பெறாத நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 150 ரன்களுக்கு சுருண்டது. நிதிஷ் ரெட்டி 41 ரன்னும், ரிஷப் பண்ட் 37 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் ஜோஸ் ஹசல்வுட் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா பும்ராவின் அசுர வேகத்தில் 104 ரன்களுக்கு சுருண்டது. இதில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுக்க, அலெக்ஸ் கேரி 21 ரன்கள் எடுத்தனர். பவுலிங்கை பொறுத்த வரையில் பும்ரா 5 விக்கெட்டும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இடையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் இருவரும் நிதானமாக தொடங்கினர். 2ஆம் நாள் முடிவில் இருவரும் விக்கெட் இழக்காமல் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். இரண்டாவது மற்றும் மூன்றாவது செசன்களில் கங்காரு பந்துவீச்சாளர்களிடமிருந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்த யஷஸ்வி-ராகுல் ஜோடி கிரீஸில் நிலைபெற்றது. கேப்டன் பாட் கம்மின்ஸ் உட்பட கங்காரு அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றும், யஷஸ்வி-ராகுல் ஜோடியை ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இரு தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதத்தை நெருங்கினார். 90 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தனது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அடித்தார். மறுபுறம், நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் நான்கு பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவ்விருவரின் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்தது.
இதில் ஜெய்ஸ்வால் 90 ரன்னுடனும், ராகுல் 62 ரன்னுடனும் 3ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில், ஜெய்ஸ்வால் சிக்ஸர் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 4ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ஒருபுறம் நிதானமாக விளையாடி வந்த கேஎல் ராகுல் 77 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டில் 201 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தது.
இதையடுத்து விராட் கோலி மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 81ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து அதனை மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு பிளையிங் கிஸ் கொடுத்தார். கோலி சதம் அடித்த உடனே இந்திய அணி 487/6 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு 533 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக விராட் கோலி மீண்டு ஃபார்முக்கு திரும்பினார். இது இந்திய அணிக்கு மேலும் நம்பிக்கை அளித்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் முதல் ஓவரிலேயே நாதன் மெக்ஸ்வீனி 0 ரன்னுக்கு வெளியேறினார். அடுத்து வந்த பேட் கம்மின்ஸ் 2 ரன்னுக்கு சிராஜ் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இன்றைய நாளின் கடைசி ஓவரில் பும்ரா மார்னஷ் லபுஷென் விக்கெட்டையும் எடுத்தார். இறுதியாக 3ஆவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்கள் எடுத்துள்ளது.