
No RTM For KKR and RR in IPL 2025 Mega Auction : ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சற்று பின்னடைவை சந்திக்க உள்ளன. மற்ற அணிகளுக்கு 'ரைட் டு மேட்ச்' வசதி இருந்தாலும், இந்த இரண்டு அணிகளுக்கும் அந்த வசதி இல்லை. ஏலத்திற்கு முன்பே 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டதால் இந்த வசதி இவர்களுக்கு இல்லை. எனினும், மற்ற அணிகளைப் போலவே, எந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என்பது குறித்து கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் திட்டமிடத் தொடங்கியுள்ளன.
ரைட் டு மேட்ச் என்றால் என்ன?
2018 ஐபிஎல் தொடரில் இருந்து 'ரைட் டு மேட்ச்' விதி அமலுக்கு வந்தது. இதன்படி, கடந்த சீசனில் தங்கள் அணியில் விளையாடிய ஒரு வீரரை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள அணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏலத்திற்கு முன் 6 வீரர்களைத் தக்கவைக்காத அணிகளுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். ஏலத்தில் ஒரு வீரருக்கு அதிகபட்சமாக எவ்வளவு தொகைக்கு ஏலம் விடப்படுகிறதோ, அந்தத் தொகையை 'ரைட் டு மேட்ச்' வசதியைப் பயன்படுத்தி அந்த வீரரின் பழைய அணி செலுத்தலாம். பின்னர் மற்ற அணிகள் தொகையை அதிகரிக்க வாய்ப்பு கிடைக்கும். பழைய அணி அதே தொகையை செலுத்தினால், அந்த வீரரை அவர்களே தக்கவைத்துக் கொள்ளலாம்.
ஐபிஎல் ஏலம் எப்போது தொடங்கும்?
இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஐபிஎல் 2025 மெகா ஏலம் தொடங்கும். மார்க்கி வீரர்களுக்கான ஏலம் ஒன்றரை மணி நேரம் நடைபெறும். பின்னர் 45 நிமிட இடைவேளைக்குப் பிறகு, மாலை 5.45 மணிக்கு மீண்டும் ஏலம் தொடங்கும். இந்திய நேரப்படி இரவு 10.30 மணி வரை ஏலம் நடைபெறும். முதல் முறையாக மல்லிகா சாகர் ஏலத்தை நடத்த உள்ளார். ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியன் கேகேஆர் உட்பட அனைத்து அணிகளும் ஏலத்திற்கு தயாராக உள்ளன.
எந்த அணியிடம் எவ்வளவு பணம் உள்ளது?
ஐபிஎல் 2025 மெகா ஏலம் தொடங்குவதற்கு முன், ரூ.120 கோடியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் தொகைக்கு பிறகு ஏலத்திற்கு கையில் வைத்திருக்கும் பர்ஸ் தொகை:
பஞ்சாப் கிங்ஸ் - ரூ. 110.50 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 41 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 55 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ. 73 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 51 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ. 69 கோடி
மும்பை இந்தியன்ஸ் – ரூ. 45 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ. 45 கோடி
குஜராத் டைட்டன்ஸ் – ரூ. 69 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு டிராபி வென்று கொடுத்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தக்க வைக்கப்படவில்லை. அவர் தற்போது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஏலத்தில் இடம் பெற்றுள்ளார்.
கேகேஆர் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்:
ரிங்கு சிங் – ரூ. 13 கோடி
வருண் சக்கரவர்த்தி – ரூ. 12 கோடி
சுனில் நரைன் – ரூ.12 கோடி
ஆண்ட்ரூ ரஸல் – ரூ.12 கோடி
ஹர்ஷித் ராணா – ரூ.4 கோடி
ரமண்தீப் சிங் – ரூ.4 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்:
சஞ்சு சாம்சன் – ரூ.18 கோடி
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரூ.18 கோடி
ரியான் பராக் – ரூ.14 கோடி
துருவ் ஜூரெல் – ரூ.14 கோடி
ஷிம்ரன் ஹெட்மயர் – ரூ.11 கோடி
சந்தீப் சர்மா – ரூ.4 கோடி (அன்கேப்டு பிளேயர்ஸ்)
இந்த ஏலத்தில் 577 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் 210 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள். 367 இந்திய கிரிக்கெட் வீரர்கள். 10 அணிகளில் மொத்தம் 204 கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது. இவர்களில் 70 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இடம் பெறுவார்கள். இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு ஆரம்பத்தில் 1,574 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்தனர்.
இவர்களில் இறுதியில் 577 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்ட் எந்த அணியில் இடம் பெற்று விளையாடுவார் என்ற எதிர்பார்த்து அதிகரித்துள்ளது. இதே போன்று லக்னோ அணிக்காக விளையாடி வந்த கேஎல் ராகுல் எந்த அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்க்கும் ஏற்பட்டுள்ளது.