
Virat Kohli Funny Video Adelaide Test : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி பிங்க் பால் போட்டியாக நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் செய்தார். விராட் கோலி பேட்டிங் செய்ய வரும் போது நகைச்சுவை சம்பவம் ஒன்று நடைபெற்றது. அது என்ன என்று பார்க்கலாம்.
அடிலெய்ட் Pink Ball Test இந்தியா vs ஆஸ்திரேலியா 2024:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பிங்க் பால் டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
பிங்க் பால் டெஸ்டில் இந்திய அணி மோசமான தொடக்கத்தைப் பெற்றது. வெறும் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான சாதனையை படைத்தது. மாஸான பிளேயர்ஸ் கூட ஆஸி பவுலர்களின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அதில் விராட் கோலியும் ஒருவர். 4ஆவது வரிசையில் பேட்டிங் செய்ய வந்த விராட் கோலி 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடிலெய்ட் டெஸ்டில் நடந்த நகைச்சுவை நிகழ்வு
அடிலெய்டில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு நகைச்சுவை நிகழ்வும் அரங்கேறியது. விராட் கோலி கையுறைகளை அணிந்து பேட்டிங் செய்ய ரெடியாக மைதானத்திற்குள் நுழையத் தொடங்கினார், ஆனால் திடீரென்று ஏதோ நடந்ததால் அவர் திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று.
இந்த டெஸ்ட் போட்டியின் 8ஆவது ஓவரில் மிகவும் வேடிக்கையான ஒரு காட்சி அரங்கேறியது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் பந்துவீச வந்தார். அப்போது கே.எல். ராகுல் களத்தில் இருந்தார். போலண்ட் முதல் பந்தை துல்லியமான லைன் அண்ட் லெந்தில் வீசினார், இதனால் கே.எல். ராகுல் முற்றிலும் ஏமாற்றப்பட்டார்.
குஷி மோடில் ஆஸ்திரேலிய வீரர்கள்
ஸ்காட் போலண்டின் அவுட் ஸ்விங்கர் பந்தில் கே.எல். ராகுல் பேட்டை சுழற்ற முயன்றார், இதனால் அவர் தவறவிட்டார். பந்து நேராக விக்கெட் கீப்பர் கைக்கு சென்றது. அதன் பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் சத்தமாக அப்பீல் செய்தனர். நடுவர் அவுட் கொடுத்தார்.
நடுவர் அவுட் கொடுத்ததும் ஆஸ்திரேலிய அணியில் கொண்டாட்டம் ஏற்பட்டது. அனைத்து வீரர்களும் குதிக்கத் தொடங்கினர். கே.எல். ராகுல் ஆட்டமிழந்தவுடன், விராட் கோலி பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் வரத் தொடங்கினார். அப்போது ஒரு அரிய காட்சி அரங்கேறியது.
விராட் கோலியுடன் நடந்த காமெடி மூவ்மெண்ட்:
கே.எல். ராகுல் ஆட்டமிழந்து வெளியே சென்று கொண்டிருந்தபோது, விராட் கோலி பேட்டிங் செய்ய உள்ளே வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மூன்றாவது நடுவர் அந்தப் பந்தை நோ-பால் என்று அறிவித்தார். இதனால் கே.எல். ராகுலின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
அவர் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். மறுபுறம், விராட் கோலி மைதானத்திற்குள் வந்த பிறகு டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று. இந்த திடீர் மாற்றத்தால் விராட் கோலி மிகவும் அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.