4 போல்டு, ஒரு கேட்ச் – சரித்திரம் படைத்த வருண் சக்கரவர்த்தி – முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!

First Published | Nov 10, 2024, 11:15 PM IST

Varun Chakravarthy Maiden 5 Wickets, IND vs SA 2nd T20 Cricket : தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

Varun Chakravarthy, IND vs SA 2nd T20

Varun Chakravarthy Maiden 5 Wickets, IND vs SA 2nd T20 Cricket : தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது 2ஆவது டி20 போட்டி விளையாடி வருகிறது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கடைசியில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

India vs South Africa 2nd T20, Varun Chakravarthy

இதில் சஞ்சு சாம்சன் 0, அபிஷேக் சர்மா 4, சூர்யகுமார் யாதவ் 4, ரிங்கு சிங் 9, திலக் வர்மா 20, அக்‌ஷர் படேல் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா மட்டும் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் தென் ஆப்பிரிக்கா அணியில் மார்கோ ஜான்சென், ஜெரால்டு கோட்ஸி, சிமலானே, மார்க்ரம், பீட்டர் என்று அனைவரும் தலா ஒரு விகெட்டுகள் கைப்பற்றினர்.

Tap to resize

Varun Chakravarthy 5 Wickets, IND vs SA 2nd T20

பின்னர் 125 ரன்களை இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்கா விளையாடியது. இதில், ரியான் ரெக்கல்டன் மற்றும் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், இருவரும் அதிரடியை தொடங்க போட்டியின் 3ஆவது ஓவரில் ரியான் ரெக்கல்டன் 13 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் பவர்பிளேயின் கடைசி ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசினார். அந்த ஓவரில் 2ஆவது பந்தில் கேப்டன் எய்டன் மார்க்ரம் கிளீன் போல்டானார்.

India vs South Africa, T20 Cricket, Varun Chakravarthy

அதன் பிறகு மீண்டும் 7.4ஆவது ஓவரில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் கிளீன் போல்டானார். 10.5ஆவது ஓவரில் மார்கோ யான்சென் கிளீன் போல்டானார். போட்டியின் 12.1ஆவது ஓவரில் ஹென்ரிச் கிளாசென் 2 ரன்னுக்கு ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். கடைசியாக அடுத்த பந்திலேயே டேவிட் மில்லரை கிளீன் போல்டாக்கி டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனையை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். 

Varun Chakravarthy 5 Wickets

இதற்கு முன்னதாக டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் யுஸ்வேந்திர சஹால் 6/25 விக்கெட்டுகள் கைப்பற்றியது பெஸ்ட் பவுலிங்காக இருந்தது. சஹாலைத் தொடர்ந்து 2ஆவது சிறந்த பந்து வீச்சாளர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார். பாகிஸ்தான் வீரர் உமர் குல்லுக்கு பிறகு (5 விக்கெட் 6 ரன் – 5/6) தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக சிறந்து பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். 4 ஓவர்கள் வீசிய வருண் சக்கரவர்த்தி 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், இதில் 4 கிளீன் போல்டு ஒரு கேட்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!